கம்ப்யூட்டர் புரட்சி எங்கே? ராமதாஸ் கேள்வி!
சென்னை:
இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சி வந்து விட்டதாக கூறுவதில் அர்த்தம் இல்லை. கிராமப்புற மாணவர்களுக்கு இன்னும்கம்ப்யூட்டர் கைக்கு எட்டாத தூரத்தில்தான் உள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறனைவாரியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ரூ. 10,000 கம்ப்யூட்டர், பிராட்பேண்ட் இன்டர்நெட், குறைந்த விலையில் செல்போன்கள் என வரிசையாக திட்டங்களைஅறிவித்து, அறிமுகப்படுத்தி வருகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். மேலும், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரப்போவதாகவும் கூறி வருகிறார். இதன் மூலம் கம்ப்யூட்டர் துறையில் மிகப் பெரும் புரட்சி ஏற்படும் என்றும் அவர் கூறி வருகிறார்.இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கம்ப்யூட்டர் புரட்சி நடந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களுக்கு இந்த கம்ப்யூட்டர் புரட்சி இன்னும் சென்றடையவில்லை. அவர்களுக்கு எட்டாததூரத்தில்தான் கம்ப்யூட்டர் கல்வி உள்ளது.
அண்மையில் சென்னையைச் சேர்ந்த பொது நல நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைத்துவரும் கம்ப்யூட்டர் கல்வியும், தரமா கல்வியும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளது என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
அதிமுக ஆட்சியையும் அவர் விடவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா தினசரி கூறி வருகிறார். அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி என்றும், கல்வியில் இடை நிற்றல்குறைவதாகவும் அவர் கூறி வருகிறார். உண்மையில் என்ன நடக்கிறது?
கல்வி என்பது தொடக்கப் பள்ளியோடு நின்று விடுவதில்லை. நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி,கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என செல்கிறது. தொடக்கப்பள்ளி இடை நிற்றல் விகிதக் குறைவை மட்டுமே முதல்வர் கூறுகிறார்.மற்ற கல்வி குறித்து அவர் ஏன் கூறவில்லை?
தொடக்கப் பள்ளிக்கு மேல் ஒவ்வொரு நிலையிலும் இடை நிற்றல் என்பது 50 சதவீதத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.மொத்த உற்பத்தி மதிப்பு என்பதில் பெரிய மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது. வறுமையில் தமிழகமும்இடம் பெற்றுள்ளது. இப்படி இருக்கையில், உண்மைகளை மூடி மறைத்து விட்டு தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறுவதுஏமாற்று வேலையாகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications