இந்து துறவிகளை இணைக்க சுற்றுப்பயணம்: சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்துக்களுக்கும், இந்து மதத்திற்கும் விரோதமாக செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற நாடு முழுவதும்சுற்றுப்பயணம் செய்து மத குருக்களை சந்தித்து ஆசி கோரப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகூறியுள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததுமுதலே, இந்து மதத்திற்கும், இந்து சுய மரியாதைக்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. காஞ்சி சங்கராச்சாரியார்விவகாரத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது.

இந்த கூட்டணி அரசை அகற்ற இந்து தர்மாச்சாரியார்களின் ஆசியும், ஆதரவும் தேவை. இதற்காக தீபாவளிப் பண்டிகைக்குப்பிறகு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மத குருமார்களை சந்தித்து அவர்களின் ஆசி மற்றும் ஆதரவைக் கோரப்போகிறேன் நெருக்கடியான நேரத்தில் மக்களைக் காப்பாற்ற அவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.

இந்தியா முழுவதிலும் உள்ள இந்து மத துறவிகளை இணைத்து புதிய ஆச்சார்ய சபாவை அமைக்க வேண்டும். இதுகுறித்தும்அவர்களுடன் பேசுவேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வேரறுக்க, ஒருங்கிணைந்த ஜனதாக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் மீண்டும் இணையவேண்டும். ஜனதாக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று உருவான அனைத்துக் கட்சிகளும் இணைக்கப்பட வேண்டும் என்றார்சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+