வீரப்பன் நினைவு நாளில் உதிக்கும் முத்துலட்சுமியின் புது இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளான அக்டோபர் 18ம் தேதி தனது புதியஇயக்கத்தை தொடங்கவுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே பாடி கிராமத்தில் வைத்துதமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பின்னர் முத்துலட்சமி தனித்து விடப்பட்டார்.

வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த முத்துலட்சுமி சமீபத்தில் மேட்டூரில் ஒரு அறிவிப்பைவெளியிட்டார். வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையினரின் நடவடிக்கையால் ஏராளமான பழங்குடியின மக்கள்பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக, கர்நாடக அரசுகள் உரிய முறையில் உதவிகளை செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக முத்துலட்சுமி தெரிவித்தார்.மேலும், தனது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக மலை வாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும்கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். போகும் இடங்களில் முத்துலட்சுமிக்கு பரவலாக வரவேற்பு காணப்படுவதாககூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக புதிய இயக்கத்தைத் தொடங்கும் வேலையில் முத்துலட்சுமி பிசியாகி உள்ளார். வீரப்பன்கொல்லப்பட்டு அக்டோபர் 18ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அன்றைய தினம் தனது புதிய இயக்கத்தை முத்துலட்சுமிதொடங்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

முத்துலட்சமிக்கு வலை வீசும் கட்சிகள்: இதற்கிடையே, முத்துலட்சுமிக்கு மலை வாழ் மக்களிடையே அதிகரித்து வரும் செல்வாக்கைக்கண்ட இரண்டு முக்கியக் கட்சிகள் அவரை தங்களது கட்சியில் சேர்க்க மும்முரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் இயங்கும் வன்னிய சமூகக் கட்சியான ஜனநாய முற்போக்குக் கழகம் மற்றும் விஜயகாந்த்தின்புதிய கட்சி ஆகியவையே முத்துலட்சுமிக்கு வலை வீசும் கட்சிகள்.

வீரப்பன் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவன். இதன் காரணமாக, ஆரம்பத்தில் அவனுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது.வீரப்பனை சரணடைய வைத்து, அவனை பாமகவில் சேர்த்து தேர்தலில் நிறுத்த முன்பு ராமதாஸ் முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஆனால்அந்த முயற்சி பலிக்கவில்லை.

இந்த நிலையில் முத்துலட்சுமியை தனது கட்சியில் சேர்த்து அவரை தேர்தலில் நிறுத்த ஜெகத்ரட்சகன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவரது கட்சி பிரமுகர்கள் சிலர் முத்துலட்சுமியை அணுகியுள்ளனர்.

இதேபோல, சேலம் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் முத்துலட்சுமியை தங்களது கட்சியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் விஜயகாந்த்துடன் பேசியுள்ளனர். அவரும் இதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம். எனவே முத்துலட்சுமியைஎப்படியாவது தங்களது கட்சிக்குள் இழுக்க அவர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் இழுப்புக்கு முத்துலட்சுமி வருவாரா அல்லது வேறு பாதையில் போவாரா என்பது அக்டோபர் 18ம் தேதி தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+