தமிழை அழிக்கும் ஆங்கிலம்! ராமதாஸ் ஆதங்கம்
சென்னை:
இந்தியை முதலில் எதிர்த்து வந்தோம். ஆனால் இப்போது ஆங்கிலம், தமிழ் மொழியை அழித்துக் கொண்டுள்ளது என்று பாமகநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் பாமக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,பெரியார் இந்தி மொழியை எதிர்த்தார். அந்நிய மொழி வந்தால் தமிழ் பாதிக்கப்படும் என்றார். ஆனால் இதை அந்நியமொழியான ஆங்கிலத்தால் தமிழ் அழிந்து வருகிறது.தமிழ் அழிவதை நாம் உணரவில்லை. ஆங்கிலத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு மொழிப் பாடமாகவைக்க வேண்டும். அதையே பிரதானமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.
ரசிகர் மன்றங்கள் இப்போது அரசியல் கட்சியாக மாறி வருகின்றன. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உத்தரப்பிரதேசஆளுநர் ராஜேஷ்வர் சொன்ன கருத்துதான் எனது கருத்தும். அவர் சொன்னார்: தமிழகத்தைப் போல நடிகர்களுக்கான ரசிகர்மன்றங்கள் வேறு எங்குமே இல்லை. இந்த மன்றங்கள் அரசியல் கட்சிகளாக உருவெடுப்பது பெரும் ஆபத்தாக முடியும்.இளைஞர்கள் பகுத்தறிவு குறித்து சிந்திக்க வேண்டும். மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று ராஜேஷ்வர்சொன்னார்.
பெரியாரின் அறிவுப்புரட்சி இன்னும் தொடர வேண்டும். இளைஞர்கள் எந்த நிலையில் இருக்கிறர்கள், எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பிற மொழிக் கலப்பின்றி தமிழில் பேசுவது எப்படி என்ற தலைப்பில் ராமதாஸ் எழுதிய நூலை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications