கோட்டை முன் உண்ணாவிரதம்!: போலீஸ்காரர், மனைவியுடன் கைது
சென்னை:
சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற போலீஸ்காரர்அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் நவநீதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் புதுக்கோட்டையில் ஆயுதப் படைப் பிரிவில் ஓட்டுநராகபணிபுரிந்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு லஞ்சம் வாங்க முயன்றதாக கூறி அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் ஓய்வு பெறமுடியவில்லை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கவில்லை.இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜகோபால். அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறுஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தொடர்ந்து பணியில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வரிலிருந்து உயர்காவல் அதிகாரிகள் வரை பலருக்கும் மனு அனுப்பியும் ராஜகோபாலுக்கு விடிவு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ராஜகோபால், தனது மனைவி சந்திராவுடன் சென்னை வந்தார். சட்டசபை கூடும் தினமான செவ்வாய்க்கிழமைகாலை அவர் கோட்டைக்கு வந்தார். அங்கு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்திஅவர்களைக் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications