நம்பர் டூ ஆகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கட்சியில் தனக்கு அடுத்தஇடத்தைக் கொடுக்க நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாக விளங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த்தின் கட்சியில் இணைந்துள்ளார்.திரை மறைவில் விஜயகாந்த்துக்கு ஆலோசனை வழங்கி வந்த அவர் தற்போது நேரடியாக கட்சியில் இணைந்துள்ளார்.இதைத் தொடர்ந்து கட்சியில் அவருக்கு முக்கியப் பதவியைக் கொடுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. திராவிடக்கட்சிகளைப் பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆர். இருந்தபோது மூத்த தலைவர்களுக்கு அவைத் தலைவர் பதவியைக் கொடுப்பது வழக்கம்.
அதேபோல தற்போது ஜெயலலிதாவும் மூத்த தலைவர்களுக்கு அவைத் தலைவர் பதவியைக் கொடுத்து வருகிறார். நெடுஞ்செழியன்உயிருடன் இருந்தவரை அவர்தான் அதிமுகவில் நம்பர் டூ தலைவராக இருந்து வந்தார்.
ஆனால் திமுகவைப் பொருத்தவரை இந்தப் பிரச்சினைகளுக்கு இடமில்லை. காரணம் அங்கு கருணாநிதி மட்டுமே முக்கியத் தலைவராகஇருந்து வருகிறார். மற்ற அனைவருமே அங்கு இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக பாணியில் தனது கட்சியிலும் மூத்தத் தலைவர்களுக்கு முக்கிய இடம் கொடுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. அந்த அடிப்படையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கட்சியின் அவைத் தலைவர் பதவியை விஜயகாந்த் கொடுக்கக் கூடும் எனத்தெரிகிறது.
கட்சியின் பொதுச் செயலாளராக தற்போது மன்றத் தலைவராக இருக்கும் ராமு வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில்அனேகமாக மாற்றம் இருக்காது. எனவே பண்ருட்டியாரை அவைத் தலைவராக அறிவித்து அவரது ஆலோசனைப்படி கட்சியின் செயல்திட்டங்கள், கொள்கைகளை விஜயகாந்த் வகுப்பார் எனத் தெரிகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் பண்ருட்டியின் ஆலோசனையைவிஜயகாந்த் கோரியுள்ளார். தறபோது நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பண்ருட்டியாரும், விஜயகாந்த்தும் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாகிகள் நியமனம் குறித்து இன்னும் சில நாட்களில் விஜயகாந்த்தே அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே,நிர்வாகிகள் பொறுப்புக்கு மன்றத்தினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே புதிதாக யாரையும் நியமிக்காமல் தற்போதைக்கு மன்றப்பொறுப்புகளில் உள்ளவர்களையே கட்சிப் பொறுப்பிலும் நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications