சூரிய கிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடல்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
வரும் அக்டோபர் 3ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படவுள்ளது.
அன்றைய தினம் அதிகாலை சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை ஆகியவை வழக்கம் போல் நடக்கும். பின்னர்அதிகாலை 3.15 மணி முதல் 6.15 மணி வரையிலும் காலை 7.15 முதல் 9.10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யஅனுமதிக்கப்படுவர்.இதையடுத்து சூர்யகிரணம் ஏற்படுவதால், காலை 9.15 மணிக்கு கோவிலின் நடை சாத்தப்பட்டுவிடும். இரவு 7.15 மணிவரையிலும் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டே இருக்கும்.
இரவு 7.15 மணிக்கு மேல் கோவில் சுத்தம் செய்யப்படும். மகா சம்ரோச்சனம் நடத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும்தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதே போல தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களும் சூர்ய கிரகணத்தையொட்டிமூடப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications