தா.கி. கொலை வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தா.கி. கொலை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இவ்வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால்அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவதற்குத்தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் எச்.கே.சேமா, பி.என்.ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர்,
வழக்கு விசாரணைக்குத் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அழகிரிஉள்ளிட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
முன்னதாக காவல்துறை தாக்கல் செய்த மனுவில், அழகிரி மிகப் பெரும் அரசியல் தலைவரின் மகன். எனவேமதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அவருக்கு செல்வாக்கு நிறைய உள்ளது.
ஆள் பலம், பண பலத்தைக் காட்டி அவர் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கிறார், அவர்களுக்கு மிரட்டலும்விடுக்கிறார்.
எனவே மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் சாட்சியம் சொல்ல சாட்சிகள் அஞ்சும்நிலை உள்ளது. எனவே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications