முஸ்லீம் பெண்களையும் இழிவுபடுத்துவிட்டார் குஷ்பு: தமுமுக
சென்னை - மதுரை:
நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
தமிழகப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கேதொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் குதித்துள்ளது. சென்னையில் இந்த அமைப்பைச் சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் நடிகர் சங்கம் உள்ள பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு குஷ்பு இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் தமிழ்ப் பெண்களை மட்டுமல்லாது,முஸ்லீம் பெண்களையும் குஷ்பு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் கூறினர்.
முன்னதாக குஷ்பு இஸ்லாமியப் பெண் என்பதால் தான் அவரை தமிழர் அமைப்புகள் எதிர்க்கின்றன என்பது போன்ற மாயையைஉருவாக்க சிலர் முயன்றனர். இதன்மூலம் இஸ்லாமிய, தமிழர் அமைப்புகளுக்கு இடையே சிண்டு முடியும் முயற்சிகள் நடந்தன.
இப்போது இஸ்லாமிய அமைப்புகளே குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள அந்த முயற்சிகள்தவிடுபொடியாகியுள்ளன.
அதே போல குஷ்பு விவகாரம் தொடர்பாக மதுரையில் இதுவரை பெரிய அளவில் போராட்டம் நடைபெறாமல் இருந்தது.ஆனால் நேற்று முழுவதும் குஷ்புவைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தின.
பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத், விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமானோர் குஷ்புவைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர்.
இதே மதுரையில் தான் முன்பொரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications