ஊட்டி ரேடியோ நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தைகள்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டி அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் 3 குட்டிகளுடன் தாய் சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பு அலுவலகம் உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் இந்த வானொலி நிலையவளாகம் உள்ளது. இங்கு கட்டடங்கள் தவிர ஏராளமான புதர்களும், பெரும் மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன.இன்று காலை, வானொலி நிலைய வளாகத்திற்குள் 3 குட்டிகளுடன், ஒரு தாய் சிறுத்தை புகுந்தது.
இதைப் பார்த்து விட்ட ஊழியர் பாரக் என்பவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
சிறுத்தைகள் நுழைந்ததால் வானொலி நிலைய ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் குட்டிகளுடன் தாய்சிறுத்தை பதுங்கி விட்டது. இருப்பினும், அது வானொலி நிலைய வளாகத்திற்குள்தான் இன்னும் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.
4 சிறுத்தைகளையும் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications