அக். 5 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்: ஆந்திரா உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்கு அக்டோபர் 5 அல்லது 6ம் தேதி முதல் கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் லட்சுமய்யா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கண்டலேறு அணையில் தற்போது 6 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால்அணையின் நீர் இருப்பு 8 டிஎம்சியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 5 அல்லது 6ம் தேதி முதல் சென்னைக்குக் கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும்.
இந்தத் தண்ணீர் அக்டோபர் 15ம் தேதி வாக்கில் சென்னையை அடையும். நீர் இருப்பு மேலும் அதிகரித்தால் சென்னைக்குக் கூடுதல் நீர்திறந்து விடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications