ஆசியாவின் டாப் 50 நிறுவனங்களில் இன்போசிஸ், விப்ரோ, ஐசிஐசிஐ
நியூயார்க்:
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவின் முன்னணி 50 நிறுவனங்களின் பட்டியலில் இன்போசிஸ், விப்போ மற்றும்ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
5 பில்லியன் டாலருக்கும் மேலான மதிப்பு, வருமானம் கொண்ட 500 நிறுவனங்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில்மிகப் பெரிய 50 நிறுவனங்கள் என்ற பட்டியலில் இந்த மூன்று நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.தொடர்ந்த லாபம், தொடர்த வளர்ச்சி, பங்குகளின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவை தேர்வாகியுள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச சந்தை மதிப்பு 14.7 பில்லியன் டாலர்களாகும் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. விப்ரோவின் மதிப்பு11.7 பில்லியன் டாலர்களாகும்.
ஆனால், இவை மூன்றுமே போர்ப்சின் டாப் டென் இடங்களில் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை. அதில் ஒன்று சீனாவின் பெட்ரோ சைனாநிறுவனம். அதன் மதிப்பு 143.9 பில்லியன் டாலர்கள். இன்னொன்று ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட சைனா மொபைல்நிறுவநம்.
பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆஸ்திரேலியாவின் பி.எச்.பி-பில்லியன். நிறுவனம்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை ஜப்பானின் டயோட்டா மோட்டார்ஸ் பிடித்துள்ளது. இதன் மதிப்பு 146.3 பில்லியன் டாலர்கள்.
முதல் 5 இடங்களில் கடைசி இடத்தில் இருப்பது தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம். இதன் மதிப்பு 77 பில்லியன் டாலர்களாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications