கராத்தேயின் நண்பர்களும் தலைமறைவு: வீடுகளில் போலீஸ் விசாரணை
சென்னை:
லஞ்சம் வாங்கிக் கொண்டு விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி தந்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டுவரும் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் நண்பர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் கராத்தே டெல்லியில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.விளம்பரப் பலகைகள் விவகாரம் தவிர, மாநகராட்சி நிலத்தை சுவாஹா செய்தது, கள்ளக் கடத்தில் கும்பலுடன் தொடர்பு, வருமானத்தைமீறி சொத்து குவித்தது என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ளார் கராத்தே.
இவர் மீது போலீசார் இதுவரை முறையாக வழக்கு ஏதும் பதிவு செய்யாவிட்டாலும் அவரைக் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.ஆனால், தன் மீது வழக்கு ஏதும் இல்லை என்பதையே சாதகமாக வைத்துக் கொண்டு சென்னையை விட்டு வேறிடத்தில் பதுங்கியிருக்கிறார்கராத்தே.
இதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்க முடியாமல் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
கராத்தேவைப் பிடிக்க அவரது நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். அவரது கூட்டாளியான பாண்டியனின்என்பவரின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். நொச்சிக்குப்பம் துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ளஅவரது வீட்டுக்கு சாதாரண உடையில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால், அதற்குள் பாண்டியனும் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் அவரது மனைவி கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது பாண்டியனின் செல்போனை போலீசார் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
மேலும் அவரது மைத்துனரின் கடையிலும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதே போல கராத்தேவின் நிதி நிர்வாகத்தை கவனித்துவருபவரான சின்னையன், கராத்தேவின் உதவியாளரான சாதிக் ஆகியோரையும் தேடி போலீசார் அவர்களது வீடுகளுக்குச் சென்றபோதுஅவர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையே கராத்தே இப்போது டெல்லியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்தகராத்தேவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதியைப் பார்த்து கட்சியில் பலரும் திகிலடைந்துள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications