சிகரெட் காட்சிகளுக்கு தடை: ரஜினிக்கு சம்பந்தமில்லை- அன்புமணி
சென்னை:
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதித்ததற்கும் ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மத்திய நலத்துறைஅமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சினிமா, டிவியில் புகைப் பிடிக்கும் காட்சிகளுக்குத் தடை விதிக்க அன்புமணி முயற்சித்து வருகிறார். ஆனால், இந்த விஷயத்தில்சினிமாக்காரர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் தரலாம் என ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி (தடை விதிக்கும்அதிகாரம் கொண்டவர்) கருதுகிறார்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தடை இன்னும் அமலாகாமல் உள்ளது.
இந் நிலையில் அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,
சினிமா, டிவியில் சிகரெடி பிடிக்கும் காட்சிகளுக்குத் தடை கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன். படைப்புச்சுதந்திரத்தால் இளையவர்களுக்கு நாம் தவறான வழி காட்ட முடியாது. எனக்கு அரசியலைவிட மக்களின் உடல் நலன் முக்கியம்.
தடையை அமலாக்குவது குறித்து தகவல், ஒளிபரப்புத்துறையுடனும் சினிமாத்துறையினருடனும் பேசி வருகிறோம். விரைவில்கருத்து வேறுபாடுகள் தீரும்.
ரஜினி தனது படங்களில் சிகரெட் பிடிப்பதால் தான் இந்தத் தடையை கொண்டு வருகிறோம் என்று கூறுவது சரியல்ல. இதுஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு.
சந்திரமுகி படத்தில் ரஜினி சிகரெட் குடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனாலும் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால்ஏன் சிகரெட் பிடிக்கும் காட்சியை முன்பு ரஜினி படங்களில் வைத்தார் என்று புரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications
