உலகின் தலைசிறந்த நகரங்கள்: வான்கூவர், மெல்போர்ன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

மக்கள் வசிப்பதற்கு உலகின் மிகச் சிறந்த நகரங்களாக கனடாவின் வானகூவர் உள்ளிட்ட 3 நகர்களும், ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன் உள்ளிட்ட 4 நகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

லண்டனை சேர்ந்த எகனாமிஸ்ட் இதழ் ஆணடுதோறும் உலகில் உள்ள நகரங்களின் உள்கட்டமைப்பு, சுகாதாரம்,பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் வேலைவாய்ப்பு சேவை ஆகியவற்றை பற்றி கருத்து கணிப்புநடத்தி சிறந்த 10 நகர்களை தேர்வு செய்து வருகிறது.

4 வது ஆண்டாக இவர்கள் உலகில் 127 நகரங்களை தேர்ந்தெடுத்து நடத்திய கருத்து கணிப்பில் வான்கூவர் சிறந்தநகரமாக தேர்வு பெற்று முதல் இடத்தை வகிக்கிறது.

கனடாவின் டொராண்டோ, கல்கேரி நகரங்கள் முறையே 9வது மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளன.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் உள்ளது. பெர்த், அடிலைட், சிட்னி ஆகிய நகர்கள்முறையே 6,7,8வது இடத்தைப் பிடித்துள்ளன.

வியன்னா, ஜெனீவா, சூரிச் ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பிற நகரங்களாகும்.

மோசமான நகரங்கள்:

அல்ஜீரியாத் தநைகர் அல்ஜியர்சும், பாபுவ நியூ கினியா தீவுகளின் போர்ட் மோரஸ்பி ஆகிய நகரங்களில்அன்றாட வாழ்க்கையே பெரிய சவாலாக உள்ளதால் உலகிலேயே மோசமான 10 நகரங்களில் கடைசி இடத்தைப்பிடித்துள்ளன.

மோசமான 10 நகரங்கள் வரிசை: தெஹ்ரான், டெகரான், தெளலா, ஹராரே, அபிட்ஜான், நாம்பென், லாகோஸ்,கராச்சி, டாக்கா, அல்ஜீரியர்ஸ், போர்ட் மோரஸ்பி ஆகியவை.

மெல்போர்ன் நகரம் ஆஸ்திரேலியாவின் சிறந்த நகரமாக திகழ்கிறது. ஆனால் அழகான நகரம் என்ற அந்தஸ்த்தைஇழந்து விட்டது. அந்த இடத்தை வான்கூவர் பிடித்துவிட்டது.

அதேபோல ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பைன் நகரம் இந்த முறை 11வது இடத்தை பிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+