திருவிளையாடல்: நீதிமன்றத்தில் தனுஷ் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

Dhanushஇவரது சகோதரி விமல கீதா இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பெயரை எதிர்த்து நடிகர்திலகம் சிவாஜி சமுகநல பேரவைத் தலைவர் சந்திரசேகரன் நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரிக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், சிவாஜி நடித்த திருவிளையாடல் படம் புராண படமாகும். இந்தப் படத்தை சிறந்த பக்தி படமாக மக்கள்போற்றி வருகின்றனர். ஆனால் நீங்கள் இந்தப் படத்தின் பெயரை வியாபாரரீதியாக பயன்படுத்துகிறீர்கள்.

இதனால் படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடருவோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் ஒரு கேவியட் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அதில், திருவிளையாடல் படம் தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் எனது தரப்பின் கருத்தைகேட்காமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

இதே போல விமல கீதாவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+