கராத்தேவை தேடுகிறோம்: வாய் திறந்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கராத்தே தியாகராஜனை போலீசார் தேடி வருவதாகவும் அவரைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடப்பதாகவும்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதன் மூலம் இப்போது தான் அவரை போலீஸ் தேடுவதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையை, தான் திருவனந்தபுரத்தில் தான் இருப்பதாகவும், வரும் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பவுள்ளதாகவும்கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

போயஸ் கார்டனின் அதிருப்திக்கு உள்ளாகி ஊழல் உள்பட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்படுவதை அறிந்து எஸ்கேப்ஆகிவிட்ட தியாகு இதுவரை ஊர் பக்கம் திரும்பவில்லை. அவரைக் கைது செய்யப் போவதாகவோ அவர் மீதான வழக்குகள்குறித்தோ அரசும் போலீசாரும் ஏதும் கூறவில்லை.

நிருபர்கள் தான் தோண்டித் துருவி விஷயங்களை வெளியில் அள்ளிக் கொண்டுள்ளனர்.

பினாமி மீது 95 ரூபா வழக்கு:

இந் நிலையில் தியாகுவின் பினாமிகளைப் பிடித்து அவரை மடக்க போலீசார் முயன்று வருகின்றனர். இதற்கிடையே கராத்தேவின்நெருங்கிய நண்பரான ஜெகன்னாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சுரேஷ் என்பவரை மிரட்டி ரூ. 95 (ரிப்பீட்டு.. ரூ.95 மட்டும்) பறித்ததாக ஜெகன்னாதன கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெகன்னாதனை தங்களது காவலில் எடுத்து கராத்தே குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஜெகன்னாதனைஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஆண்டுக்கு ரூ. 10,000 வருமான வரிகட்டுபவர் என் கணவர். அவர் மீது போய் சுரேஷ் என்பரிடம் 95 ரூபாய் பறித்ததாக வழக்குப் போட்டுள்ளது போலீஸ். இதுஜோடிக்கப்பட்டு வழக்கு என்று கூறியுள்ளார்.

போலீஸ் முகத்தில் கரி பூசிய சுரேஷ்:

இதற்கிடையே சுரேசும் நீதிமன்றத்தில் ஆஜராகி, நான் ஜெகன்னாதன் மீது எந்தப் புகாரும் தரவில்லை. வெற்றுத் தாளில் ன்ெனைமிரட்டி போலீசார் கையெழுத்து வாங்கினர். ஜெகன்னாதனை நான் பார்த்தது கூட கிடையாது என்று குட்டை உடைத்தார்.

இதை நீதிபதி வாக்குமுலமாக பதிவு செய்தார். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் ஜெயரத்தினகுமார்,

கராத்தேவை தேடுறோம்...

ஜெகன்னாதனை ஜாமீனில் விடக் கூடாது. அவர் கொடூரமான குற்றவாளி. பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.ஜெகன்னாதனுடன் தொடர்புடைய கராத்தே தியாகராஜன் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க குழுக் குழுவாக நாடுமுழுவதும் தமிழக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இதனால் ஜெகன்னாதனை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றார்.

இதன் மூலம் கராத்தேவை போலீஸ் தேடுவதை இப்போது தான் வெளியில் சொல்லியிருக்கிறது தமிழக அரசு.

நானே வருவேன்... கராத்ஸ்:

இதற்கிடையே ஒவ்வொரு முறையும் ஒரு இடத்தில் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் கராத்தே இப்போது லேட்டஸ்டாக ஒரு நிருபருக்கு அளித்துள்ளபேட்டியின் விவரம்:

நான் சென்னையில் இல்லாததால் இதுபோன்ற வதந்திகள் கிளப்பப்பட்டு வருகின்றன. நான் வெளிநாட்டுக்கு (நேபாளத்துக்கு) தப்பிவிட்டதாகவும்கூறுகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளேன். (அப்ப உடனே திரும்பி வர வேண்டியது தானே?)

எனக்கு சென்னையில் இப்போது முக்கிய வேலை ஏதும் இல்லை (எப்போ தான் வேலை இருந்துச்சு?). இதனால் கோவில்களில் சாமி கும்பிடச்சென்றேன். (ரொம்ப பக்தி!!)

நான் வெளிநாட்டுக்குப் போகும்போது என் கட்சித் தலைமையிடமும் அதிகாரிகளிடமும் தகவல் சொல்லிவிட்டுத் தான் போய்இருக்கிறேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகிறேன் (இதையும்நம்புவோம்!) என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே தனக்கும் மேலிடத்துக்கும் வேண்டப்பட்டவர்கள் மூலமாக போயஸ் கார்டனுடன் சமாதானத்துக்கு கராத்தேமுயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இப்போது சாமாதானத்துக்கு வாய்ப்பில்லையாம், டூ லேட் ஆகிவிட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+