துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பாஜக அமைச்சர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சஸ்ராம்:

பிகாரில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்தியஒளிபரப்புத்துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் சுடப்பட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரைச் சுட்டவரைபாஜக தொண்டர்கள் தாக்கியதில் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிகாரில் தொங்கு சட்டசபை ஏற்பட்டு யாராலும் ஆட்சியமைக்க முடியாததால் அங்கு 6 மாதத்தில் இரண்டாவது முறையாகசட்டசபைத் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளன.

நோகா என்ற தொகுதியில் பாஜகவின் சார்பில் செளரசியா என்பவர் போட்டியிட உள்ளார். அவருக்கு ஆதரவாக இன்று சஸராம்என்ற இடத்தில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் ரவிசங்கர் பிரசாத் பேசிக் கொண்டிருந்தார். (பிகாரைச் சேர்ந்தஇவர் கடந்த பாஜக ஆட்சியில் செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராக பிரசாத் இருந்தார்.)

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளோடு எழுந்தார். செளரசியாவை நோக்கிதுப்பாக்கிகளால் சுட்டார். ஆனால், இதைக் கண்ட செளரசியா குனிந்து கொள்ளவே குண்டு ரவிசங்கர் மீது பாய்ந்தது. இதில்கையில் பலத்த காயமடைந்த பிரசாத் மேடையிலேயே சரிந்து விழுந்தார். செளரசியா காயமின்றி தப்பிவிட்டார்.

இதையடுத்து அந்த துப்பாக்கி ஏந்திய நபர் மீது பாயந்த செளரசியா அவரைப் பிடித்தார். ஒரு துப்பாக்கியையும் பறித்தார்.இதையடுத்து அந்த நபரை நோக்கி கூட்டம் பாய்ந்தது. அவரை பாஜக தொண்டர்கள் அடித்து, உதைத்தனர். இதில் அவர் மயங்கிசரிந்தார். முன்னதாக அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், கடைசியாகக் கிடைத்த தகவலின்டி அவரது நிலைமைமிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பிரசாத் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டுகுண்டு அகற்றப்பட்டது. பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் பாட்னா கொண்டு செல்லப்பட்டார்.

இந்த கூட்ட மேடையில் மூத்த பாஜக தலைவரான பிரமோத் மகாஜனும் இருந்தது குறிப்பிடத்தக்ககது.

இத் தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் தலைவர் அத்வானி கூறுகையில், பிகாரில் சட்டம்ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது என்றார்.

இப் பகுதியில் நக்ஸல்களின் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+