ஜெயேந்திரர்: 2 பெண் வக்கீல்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது அரசு
காஞ்சி:
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக இரண்டு பெண் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ்பெற்றுள்ளது.
அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக நாதிரா பானு, ரேவதி வாசுதேவன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.இதை எதிர்த்து இரு பெண் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். ரவியை நாங்கள் மிரட்டினோமா என்பது குறித்து சிபிஐவிசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரினர்.
இதையடுத்து இவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கடந்த ஜூலை மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திடம்தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், வாபஸ் பெறாமல் இழுத்தடித்து வந்தது.
இந் நிலையில், தன் மீதான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அதீத கவனம் செலுத்துவதால் விசாரணையை வேறு மாநிலத்துக்குமாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது, விடுமுறை நாளில் காஞ்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்தது, அந்த தினத்தில் போலீசார் குற்றப் பத்திரிக்கையைதாக்கல் செய்தது ஆகியவை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டுக்கு யாராவது நிர்பந்தம் தந்தார்களா என்று கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கறிஞர்கள் மீதேவழக்குகள் போட்டது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இந்த இரு பெண் வழக்கறிஞர்கள் மீதான வழக்கையும் வாபஸ் பெறுவதாக காஞ்சி நீதிமன்றத்தில் தமிழக அரசுநேற்று அறிவித்தது. இதற்கான மனுவையும் தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி உத்தமராஜன் இந்த வழக்குகளைரத்து செய்து உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications