ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை: திருப்பதிக்கு அனுப்பப்பட்டது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
பிரமோற்சவத்தின்போது கருட சேவை தினத்தன்று திருப்பதி ஏழுமலையானுக்கும், மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது பெருமாளுக்கும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்படும்.
இதன்படி நாளை (சனிக்கிழமை) கருட சேவை நடக்கிறது. இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படும். இதற்காக மாலை, பட்டு, கிளி ஆகியவை நேற்று திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications