கராத்தேவுக்கு நான் அடைக்கலம் தரவில்லை: அய்யர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தலைமறைவாக உள்ள துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது பாதுகாப்பில் இல்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர்அய்யர் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தபோது அய்யருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கும் மிக நெருக்கமாக இருந்தார் கராத்தே.இவர்களது உதவியோடு மீண்டும் காங்கிரசில் சேர்ந்து தனக்கு அரசியல் பாதுகாப்பு தேடிக் கொள்ள கராத்தே முயன்று வருவதாகக்கூறப்படுகிறது.

அதிமுக தலைமையின் கோபத்தால் போலீசார் எந்த அளவுக்கும் தன் மீது பலம் காட்டக் கூடும் என்று அஞ்சும் கராத்தே, தனக்கு அரசியல்தஞ்சம் கிடைத்தால் மட்டுமே வெளியில் தலை காட்டும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இந் நிலையில் கராத்தேவுக்கு டெல்லியில் மணிசங்கர் அய்யர் தான் புகலிடம் தந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை அய்யர்மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில்,

நான் என் துறை தொடர்பான வேலைகளுக்காக வெளிநாட்டில் இருந்துவிட்டு இப்போது தான் டெல்லி திரும்பியுள்ளேன். தமிழக அரசியல்நிகழ்வுகள் குறித்து பெரிய அளவில் எனக்குத் தெரியவில்லை.

தியாகராஜன் தலைமறைவு என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 2001ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர்எனக்கு நெருக்கமாக இருந்தார். அதுவும் கொஞ்ச காலம் தான். பின்னர் தொடர்பை நிறுத்திக் கொண்டார். என்னை சந்தித்தால் தர்ம சங்கடம்வரலாம் என்பதால் இருவரும் சந்திப்பதில்லை.

அவர் அதிமுகவில் சேர்ந்ததில் எனக்கு வருத்தம் தான். ஆனால், இப்போது அவருக்கு நான் பாதுகாப்பு கொடுத்து வருவதாக சொல்வதுவேடிக்கையாக உள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. யாருக்காவது சந்தேதம் இருந்தால் எனக்கு தொடர்புள்ளஇடங்களில் போய் தாராளமாக தேடிப் பார்த்துக் கொள்ளலாம்.

மூப்பனாருடன் தமிழ் மாநில காங்கிரசில் இருந்த தியாகராஜனை நான் தான் மீண்டும் காங்கிரசுக்கு அழைத்து வந்தேன். அப்போது நான்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர். அதனால் அவரை சேர்க்க முடிந்தது. இப்போது அந்தப் பதவியில் நான் இல்லை. இதனால்நான் நினைத்தால் யாரையும் கட்சியில் சேர்க்க முடியாது.

ஆனால், வேறு யார் மூலமாவது கட்சியில் சேர கராத்தே முயற்சி செய்கிறாரா என்று எனக்குத் தெரியாது. என் வழியாக அவர்முயலவில்லை. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர யார் முன் வந்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

கராத்தே குடும்பத்துக்கு போலீஸ் பாதுபாப்பு:

இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கராத்தேவின் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.அடையாறில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலை முதல் 2 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+