இந்திய-அமெரிக்க விமானங்களில் ரகசிய கேமரா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அனைத்து விமானங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தும்படி அமெரிக்க விமானப் போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்படும் விமானங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுவதால்பயணிகளின் அனைத்து நடவடிக்கைகளும் அதில் பதிவு செய்யப்படும்.
நியூயார்க் இரட்டை கோபுரத்தை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்ததில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில்அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு படியாகவே இந்த ரகசிய கேமரா ஏற்பாடாம்.
இதையடுத்து, ஏர் இந்தியா மற்றும் தனியார் விமானங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications