மழை: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:
கன மழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.சென்னையில் இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானபள்ளிகளில் மாணவ, மாணவியர் குறைந்த அளவிலேயே வகுப்புகளுக்கு வந்தனர்.
இந் நிலையில் மழையைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
இதே போல பிற பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழை பாதிப்பை சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகமாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
துணை மேயர் கராத்தே காணாமல் போய்விட்ட நிலையில், விஜய்குமார் தான் மாநகராட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.அவர் கூறுகையில், சென்னை நகரில் தொடர் மழையால்
நோய் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மழை நீர்க் கால்வாய்கள் ஏற்கனவே தூர்வாரப்பட்டு விட்டதால் கடந்த வருடங்களைப் போல இந்த ஆண்டு பெரும் பாதிப்பு இருக்காது என்று நம்புகிறோம்.
சுரங்க நடை பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. சாலைகளில் பெயர்ந்து விழுந்து கிடந்த மரங்களும்அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக மாநிலத்தின் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவுவினாடிக்கு 6,300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் அதிக அளவில் நீர் வந்து கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கும் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோலராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 120 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் 80 மில்லிமீட்டர் மழைபதிவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications