திமுக கூட்டணி வெற்றிக்கு மதிமுகவே காரணம்: வைகோ
புதுக்கோட்டை:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு மதிமுகவே முக்கியக்காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மாவட்ட மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இதில் வைகோவிடம், மாவட்டம்சார்பில் ரூ. 17.50 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட வைகோதொண்டர்களிடையே பேசினார்.வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். இந்தக் கூட்டணி வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியைப் பெற வேண்டும். அதற்காக மதிமுக தொண்டர்கள் மிகக் கடுமையாக உழைக்கவேண்டும்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சி மதிமுக. இதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளனர். நமதுதொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பால்தான் இத்தகைய நிலைக்கு மதிமுக உயர்ந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தொடர்ந்து 62 நாட்கள் நடந்தேன், 47,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்துபிரசாரம் செய்தேன். அதன் பயனாகவும், மதிமுக தொண்டர்களின் பலனை எதிர்பார்க்காத உழைப்பாலும் தான்புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியால் வெல்ல முடிந்தது.
இதை நான் சொல்லவில்லை, மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்ஆகியோரும், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் என்னிடம் கூறினர். நிம்மிடம் சுயநிலம் இல்லை என்பதால்தான் எந்தக் கட்சிக்கும் வராத அளவுக்கு நமக்குக் கூட்டம் சேருகிறது.
ஊதியத்தை எதிர்பார்த்து உழைக்கக் கூடாது. அப்படி நினைத்திருந்தால் நமக்கு திருக்குறள் கிடைத்திருக்காது.அதற்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும்.
சேது சமுத்திர திட்டம், தென்னக நதிகள் இணைப்பு என பல சாதனை திட்டங்களுக்கு மதிமுக தான் முக்கிய காரணம்.இந்தியா, இலங்கை ராணுவ ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டதிலும் மதிமுக முக்கியப் பங்கு வகித்தது. இதைமக்களிடம் மதிமுக தொண்டர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
2006ல் தமிழகத்தில் மதிமுக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். என்றாலும் நம் மீது திமுக கூட்டணியினர் பெரும்நம்பிக்கை வைத்துள்ளதால், கூட்டணியின் வெற்றிக்கு மதிமுகவினர் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
எதிர் வரும் தேர்தலில் நம்மை எதிர்ப்பது எரிமலையாகவே இருந்தாலும், அவர்களைத் தகர்த்தெறிந்து தமிழ்இனத்தின் மானத்தை காக்க வேண்டும் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications