விஜயகாந்த்துடன் கூட்டணி கிடையாது: பாஜக
சென்னை:
விஜயகாந்த்தின் புதிய கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று அகில இந்தியபாஜக செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிவைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. 234 தொகுதிகளிலும் பாஜக தனித்தேப் போட்டியிடும்.எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், தலித்துகளின் நிலை, பெண்களின் நிலைகுறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரம் செய்வோம்.
முதல்வர் ஜெயலலிதா தினசரி ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். ஆனால் அவையெல்லாம் வெறும் ஏட்டளவில்மட்டுமே உள்ளன. அதற்குரிய நிதியாதாரம் குறித்து முதல்வர் பேச மறுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தமிழக நலன் குறித்துக்கவலைப்படாமல் அரசியல் செய்வதிலேயே தீவிரமாக உள்ளனர். மத்தியில் உள்ள திமுக மத்திய அமைச்சர்களால் தமிழகமக்களுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை.
அக்டோபர் 18ம் தேதி தமிழகத்தில் மாவட்ட அளவில் தேர்தல் ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். அதேபோல 21ம் தேதிமதுரையில் பாஜக வெள்ளி விழா மாநாடும் நடத்தப்படும் என்றார் தத்தாத்ரேயா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications