கள்வனின் காதலி, ஆங்கில சினிமா ஆபாச கட்அவுட்- போஸ்டர்கள் அகற்றம்
சென்னை:
சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில சினிமாவின் ஆபாச கட் அவுட்டை மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் போலீஸார் அகற்றினர்.
அதே போல நடிகர்- இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் கள்வனின் காதலி பட போஸ்டர்கள் ஆபாசமாக இருப்பதாக வந்தபுகாரையடுத்து அப்படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை போலீஸார் அகற்றினர்.
ஆபாச காட்சிகள் அடங்கிய சினிமா சுவரொட்டிகள், பேனர்கள், கட் அவுட்களை போலீஸார் அவ்வப்போது அகற்றிவருகின்றனர். இதுபோன்ற ஆபாச காட்சிகள் அடங்கியவற்றை பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வைப்போர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள அது ஒரு கனாக்காலம் படத்தின் ஆபாச போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இந் நிலையில்,அண்ணா சாலையில் அசுரன் வெர்சஸ் அரக்கன் என்ற ஆங்கில டப்பிங் படத்தின் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும்ஆபாசமாக இருப்பதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
வாயோடு வாய் வைத்து நாயகனும், நாயகியும் முத்தமிடுவது போல இருந்த இந்த பிரமாண்டமான கட்-அவுட்டால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் அந்த கட் அவுட்டை அகற்றவும், அதை வைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் கட் அவுட்டை அகற்றினர். அதை வைத்த குமார்என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்வனின் காதலி போஸ்டர்கள்:
இதே போல கள்வனின் காதலி பட போஸ்டர்கள் ஆபாசமாக இருப்பதாக வந்த புகாரையடுத்து அப்படத்தின் போஸ்டர்கள்சிலவற்றை போலீஸார் அகற்றினர்.
எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் கள்வனின் காதலி. இப்படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகளவில்இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந் நிலையில் இப்படத்தின் காட்சிகள் அடங்கிய பிரமாண்ட டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் சென்னை நகரில் சிலபகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
இவை ஆபாசமாகவும், பெண்களை வெட்கப்படுத்தும் அளவிலும் இருப்பதாகவும் கூறி வடபழனி போலீஸ் நிலையத்திற்குப்புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து வட பழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆட்சேபத்துக்குரிய சில போஸ்டர்களை அவர்கள்அகற்றினர். மற்ற போஸ்டர்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications