"இருக்கும் போதே" செத்த வாலிபர்: தனியார் மருத்துவமனையின் அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில், சாலை விபத்தில் இறந்ததாக கருதப்பட்டு பிணவறைக்கு அனுப்பப்பட்ட கல்லூரி மாணவர், உயிருடன்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை அவனியாபுரம் அருகே சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து தாறுமாறாக ஓடியது.இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் அவனியாபுரம் ஊராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ஜோதி ராமலிங்கம் என்பவன் மகன்முத்துவேலுவும் ஒருவர்.

பொறியியல் கல்லூரி மாணவரான முத்துவேல் முதலில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துவேல், இறந்து விட்டதாக 2 நாட்களுக்கு முன்பு தனியார்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து முத்துவேலின் உடலை போலீஸார் பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர். முத்துவேல் தனது கண்கள் மற்றும் சிறுநீரகங்களை தானமாக தர விருப்பம் தெவித்திருந்தார்.

இதையடுத்து அவரது கண்களையும், சிறுநீரகங்களையும் எடுப்பதற்காக டாக்டர்கள் குழு பொதுமருத்துவமனைக்கு வந்தது. பிணவறையில் இருந்த முத்துவேலின் உடலை அவர்கள் பரிசோதனை செய்தபோதுஅவருக்கு உயிர் இருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை பிணவறையிலிருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் பிணவறைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஜோதி ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+