மெகா டிவிகளின் மகா பொய்கள்: ஜெ. கிண்டல்
சென்னை:
மக்கள் நல்லெண்ணத்தை ஓட்டாக மாற்றி தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக்களே அக்டோபர் 17 ஒரு வரலாற்றுத் திருநாள்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நமது இதய சுவர்களில் எதிரொலிக்கும் திருப்பெயர் அவர் மக்களுக்காக தோற்றுவித்தஅனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் திருநாள்.
கண்டு வா என்றால் கொண்டு வா என்று நான் சொன்னதாக கருதி வென்று வரும் வீரர்கள் அல்லவா நீங்கள்,இந்தியாவின் எந்த இயக்கத்திலும் காண முடியாத விசுவாசத்தை என்னிடம் வைத்திருக்கும் இயக்கத்தின்ஒளிச்சுடர்கள் அல்லவா நீங்கள்.
கழகம் கண் விழித்த 34ம் ஆண்டு விழாவை முக மலச்சியோடும், அக மலர்ச்சியோடும் கொண்டாடுகிறோம்.இதனை நிறுவிய பெருமகனைப் போல் ஒரு தலைவரை எட்டுத் திசையும் பார்த்ததில்லை.
வானத்து சந்திரன் தேயும் ஆனால் இந்த வையத்து சந்திரன் தேயுமா எம்.ஜி.ராமசந்திரனுக்கு தேய்வு தான் வருமாதேயாத சந்திரன் நமது தென்னாட்டு சந்திரன் அல்லவா
அந்த அதிசியச் சந்திரன் தொடங்கிய இந்த அற்புத இயக்கத்தை வழி நடத்துகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
17 லட்சம் தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் நான் பொறுப்பேற்ற பிறகு 1 கோடி தொண்டர்கள்இயக்கமாக வளர்த்திருக்கிறேன்.
50 ஆண்டுகளில் ஒரு மாநில அரசு ஆற்றத் தக்க பணிகளை எல்லாம், ஐந்து ஆண்டுகளுக்குள் நான் நிறைவேற்றிஉள்ளதை கழகம் அறியும்.
ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு, இறைவன் இருப்பது நம்முடன் என்றால் எவரால் நம்மை எதிர்த்திட இயலும்.என்னைப் பொறுத்தவரை மக்களே இறைவன்.
உங்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒற்றுமை, உழைப்பு, இந்த இரண்டும் வெற்றியை தரும்.
மெகா டிவிக்கள் இருப்பதால் மகா பொய்களை சொல்லலாம் என்கின்ற மமதை கொண்ட நரித் தலைவரின்தலைமையில் இன்னும் சிலர் சேர்ந்து கொண்டார்கள். கூட்டணி அமைத்தார்கள். நாம் ஏமாந்த காலத்தில் ஏற்றம்கண்டார்கள்.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதையே தொழிலாக கொண்ட எதிரணியினர் தமிழகத்தின் திட்டங்களுக்குஒப்புதல் வழங்கக் கூட மறுத்தார்கள். இதனால் அதிமுக மட்டுமே தங்களை வாழ வைக்கும் இயக்கம் என்பதைமக்கள் புரிந்து கொண்டார்கள்.
துரோகத்தின் நிறம் மஞ்சள் என்று காவேரி உழவன் கண்ணீரால் எழுதிவிட்டான். கங்கையை கொண்டு வரமுடியாதவர்கள் காவேரியை டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.
மக்களின் நல்லெண்ணங்களை நமக்கு வாக்குகளாக மாற்ற வேண்டும். எதிரிகளின் பொய்களை முறியடிக்கவேண்டும்.
கழக தொண்டர்கள் கை கோர்த்து நின்றால் உலகப் பந்தும் சிறியதாய் ஆகும், எழுவீர் வெற்றியை பெறுவீர்.
இவ்வாறு தமது கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications