கராத்தே வேண்டாம்: கவுன்சிலர்களிடம் கெஞ்சிய அமைச்சர்கள்
சென்னை:
கராத்தேவுடன் யாரும் போக வேண்டாம் என்று அதிமுக கவுன்சிலர்களிடம் அமைச்சர்கள் கெஞ்சி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அரசுக்கு எதிராக உள்ளனர்.தங்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் புறக்கணித்தது, தங்களது சிபாரிசுகளை குப்பையில் போட்டதுஆகிய காரணங்களால் அதிமுகவில் இருந்தாலும் அதிருப்தியுடன் இருந்து வருகின்றனர்.இவர்களில் 12 பேர் வரை துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், டி.ஜெயகுமார், அன்பழகன் மற்றும்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சென்னை மாவட்ட செயலாளர்கள், முக்கியகவுன்சிலர்களை அழைத்து பேசினார்.
அப்போது உங்களது தொகுதிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். மேலும்கராத்தேவுக்கு ஆதரவாக யாரும் போய் விட வேண்டாம் என கெஞ்சினர். இதையடுத்து அனைவரும் அதிமுகதலைமைக்குக் கட்டுப்படுவதாக உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்தே கராத்தேவை கட்சியை விட்டு கட்டம் கட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்கிறார்கள்.
அதே போல தமாகா, காங்கிரசில் இணைந்த போது அதை எதிர்த்த 5 தமாகா கவுன்சிலர்கள் அதிமுகவில்இணைந்தனர். அதில் மயிலாப்பூரை சேர்ந்த சீமான் சேகர் என்பவரும் ஒருவர். கராத்தேவுடன் நெருக்கமாகஇருந்தவர் என்பதால் அவரை அமைச்சர்கள் தனியாக அழைத்து அவரது முடிவை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் கராத்தே ஒன்றும் என்னை அதிமுகவுக்கு அழைத்து வரவில்லை. நான் அதிமுக பிரமுகர்வெற்றிவேலுடன் தான் கட்சிக்கு வந்தேன். அதனால் யார் எந்த முடிவு எடுத்தாலும் நான் அதிமுகவில் நீடிப்பேன்என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நிம்மதியடைந்த அமைச்சர்கள் தரப்பு, கராத்தேவை துணை மேயர் பதவியில் இருந்து தூக்கிவிட்டுதேர்தல் நடத்தினாலும் வெற்றி நமக்கே என்று மேலிடத்துக்கு தைரியம் கொடுத்துள்ளனர்.
கவுன்சிலர்களை அமைச்சர்கள் சந்தித்து தாஜா செய்தபோது பல கவுன்சிலர்களும், மாநகராட்சி ஆணையர்எங்களை மதிப்பதில்லை என்று புகார் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் எதை கேட்டாலும் செய்து தரம்படி மாநகராட்சி ஆணையர் விஜய்குமாருக்குமேலிடத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications