உமா: பாஜகவில் மீண்டும் மகா குழப்பம்
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்க உமா பாரதி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கு பாஜக தலைவர்அத்வானியின் ஆதரவு இருந்தாலும் பிரமோத் மகாஜன் வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி உள்ளிட்ட இரண்டாம் மட்டத்தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அந்தக் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.கலவர வழக்கில் உமாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து பாபுலால் கெளர் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இப்போது மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்க உமா முயன்று வருகிறார். ஆனால், இரண்டாம் மட்டத் தலைவர்கள் அந்தமுயற்சிகளுக்கு தடை போட்டு வருகின்றனர்.
இதனால் எரிச்சலடைந்த உமா தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டினார். பிகார் தேர்தல் பிரச்சாரத்துக்குச்செல்வதையும் ரத்து செய்விட்டார். உமா நடத்திய இந்தக் கூட்டத்தில் 45க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அவர்கள்அனைவரும் பாபுலால் கெளரை பதவி நீக்கிவிட்டு உமாவை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த விஷயத்தில் உமாவுக்கு அத்வானி ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அத்வானியை விமர்சித்தார் உமா என்பதும் இதையடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மன்னிப்புக் கடிதம் தந்து கட்சியில் சேர்க்ப்பட்ட உமா, தொடர்ந்து நாயுடு, மகாஜன், ஜேட்லி ஆகியோரைத் தாக்கியேவந்தார். அரசியல் புரோக்கர்கள் என்று இவர்களுக்கு பட்டம் சூட்டிய உமா சமயம் கிடைக்கும்போதெல்லாம் இவர்களை காலைவாரி வந்தார்.
உச்ச கட்டமாக சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரையே கண்டித்து அந்த அமைப்புக்கே கடிதம் எழுதினார். அதில் மத்தியப்பிரதேச பாஜக விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் தலையீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அந்தக் கடிதம் பத்திரிக்கைகளில் லீக் ஆகிபாஜக-ஆர்எஸ்எஸ்சுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
இந் நிலையில் மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்க முயலும் உமாவைத் தடுக்க பாஜகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள்தீவிரமாக உள்ளனர். ஆனால், உமாவுக்கு அத்வானியின் மறைமுக ஆதரவு உள்ளது.
போபாலில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 45 பேரைக் கூட்டி போட்டிக் கூட்டம் போட்டு முதல்வர் பதவியில் இருந்து பாபுலால்கெளரை நீக்க வேண்டும் என்று உமா கோரியதைத் தொடர்ந்து, டெல்லியில் அத்வானியின் தலைமையில் மூத்த பாஜகதலைவர்கள் கூட்டம் நடந்தது.
அதில் உமாவை அடக்கி வைக்க வேண்டும் என இரண்டாம் மட்டத் தலைவர்களும் உமா எதிர்ப்பு கோஷ்டியின்முக்கியஸ்தர்களுமான மகாஜன், ஜேட்லி, நக்வி, நாயுடு ஆகியோர் குரல் தந்ததனர்.
எதிர்ப்பு தீவிரமாக இருப்பதை உணர்ந்த கட்சியின் தலைவர் அத்வானி, இப்போதைக்கு மத்தியப் பிரதேசத்தில் முதல்வரைமாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து தனது பிகார் பிரச்சாரப் பயணத்தை உமா பாரதி ரத்து செய்துள்ளார்.
இந் நிலையில் இன்று மாஜி பிரதமர் வாஜ்பாயை டெல்லியில் சந்தித்த உமாவின் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் முதல்வராக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதே போல உமாவை முதல்வராக்கக் கோரி அத்வானியிடம் கடிதமும் தந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications