டெல்லியில் திடீரென தோன்றிய கராத்தே தியாகு: சன் டிவிக்கு பேட்டி
டெல்லி:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட, சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் டெல்லியில் தோன்றினார். சன் டிவிதொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து பரபரப்பூட்டியுள்ளார்.
திடீரென அதிமுக தலைமையில் வெறுப்புக்கு உள்ளாகி நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் சமீபத்தில்அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விசுவசாக இருந்ததற்காக தன்னை கட்சி மேலிடம் நீக்கியுள்ளதாகவும் அதற்காகமுதல்வர் ஜெயலலிவாவுக்கு நன்றி, நன்றி என்றும் கூறி அறிக்கை வெளியிட்டார்.அவர் மும்பை, ஹரியானா, டெல்லியில் மாற்றி, மாற்றி காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் (முரளி தியோரா?) பாதுகாப்பில் இருப்பதாகதகவல்கள் வெளியாகி வந்தன. இந் நிலையில், திடீரென சன் டிவிக்கு பேட்டியளித்தார்.
டெல்லியின் மையப் பகுதியான இந்தியா கேட் அருகே நின்றபடி கராத்தே தியாகராஜன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
என் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை இல்லாதவை. அனைத்துப் புகார்களிலும் சம்பந்தப்பட்டிருப்பது மாநகராட்சிஆணையர் விஜயக்குமார்தான்.
அவர் மீதான தவறுகளை மறைக்க என்னைப் பழிவாங்க திட்டமிட்டார். அவர் கொடுத்த தவறான தகவல்களின் பேரில்தான்எனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது.
நான் எனது துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். விரைவில் சென்னை திரும்புவேன். நான் எங்கேதங்கியிருக்கிறேன் என்பதை இப்போதைக்கு கூறுவதற்கில்லை.
போலீஸார் என் மீது பொய் வழக்குப் போட காத்திருப்பதாலும், எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாலும்தான் நான்தலைமறைவாக இருந்து வருகிறேன்.
நான் எப்போதுமே ராஜீவ் காந்தியின் தீவிர ஆதரவாளன். காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் நான் அதிமுகவுக்கு வந்தேன். எனவேகாங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து நான் விரைவில் முடிவெடுப்பேன் என்றார் கராத்தே.
தலைமறைவு கராத்தே தியாகராஜன் திடீரென முடிவியில் பேட்டி அளித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications