நண்பருக்கு நாயுடு ஹால் டார்ச்சர் !
சென்னை:
நண்பனுக்கு பாடம் புகட்ட பெண்களின் உள்ளாடைகளை தபாலில் அனுப்பி தொல்லை கொடுத்தவர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை மைலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). அண்ணாசாலையில் பிரபலதனியார் நிறுவனமொன்றில் மேலாளராக உள்ளார். இவரை இழிவு படுத்தி கடந்த ஒராண்டு காலமாக ஈ-மெயிலில்ஆபாச கடிதங்கள், மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ரமேஷை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் கூரியர் தபால் ஒன்றுவந்தது. அந்த தபாலை விரித்து பார்த்த போது அதற்குள் பெண்கள் அணியும் ஜட்டி, பிரா போன்றவை இருந்தன.மேலும் ஒரு கடிதமும் இருந்தது.
அந்த கடிதத்தில் நீ ஒரு பொட்டப்பயல். அதனால் தான் இதை அனுப்பியுள்ளேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் ரமேஷ் மன உளைச்சல் அடைந்தார். யார் இப்படி தமக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று புரியாமல்தவித்தார்.
அந்த உள்ளாடைகள் ஒரு இணையத் தளத்தின் ஷாப்பிங் செக்ஷன் மூலமாக வாங்கி ரமேஷின் முகவரிக்குஅனுப்பப்பட்டிருந்தது.
இதே போன்ற பார்சல் கடந்த வாரமும் மீண்டும் வரவே, அதை எடுத்துக்கொண்டு போலீஸ் கமிஷனர் நடராஜைசந்தித்து புகார் கொடுத்தார். தனக்கு இது போன்ற தொந்தரவு தரும் ஆசாமியை கண்டு பிடித்து உரிய நடவடிக்கைஎடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதயடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டதின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோதண்டராமன், மஞ்சுளா, ஆகியோர் அடங்கியபோலீஸ் படையினர் விசாரணயில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் உள்ளாடைகளை அனுப்பிய குற்றவாளி ரமேஷின் நெருங்கிய நண்பர் ஜேசு விமலன் என்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்ப்டடார். ஜேசு விமலன் சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் கம்ப்யூட்டர்பிரிவில் பணியாற்றுகிறார். ரமேசும், இவரும் ஒன்றாக படித்தவர்கள். ஜேசு விமலன் வேலை கிடைக்காமல் இருந்தபோது ரமேஷ் இவரை நீ ஒரு முட்டாள் உனக்கு எவன் வேலை கொடுப்பான் என்று திட்டியுள்ளார்.
ஜேசு விமலனுக்கு வேலை கிடைத்து விட்ட பிறகும் தொடர்ந்து இவரை ரமேஷ் கிண்டல் செய்து வந்துள்ளார்.
இதனால் தன்னை அவமானப்படுத்திய ரமேஷை அவமானப்படுத்தவே, பெண்களின் உள்ளாடைகளைஅனுப்பியதாக போலீஸ் விசாரணையில் ஜேசு விமலன் ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து ஜேசு விமலன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்ரேட்டு அருள்ராஜ்உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை தொடங்கிய 12 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இணையத்தளத்தில் ரமேஷின் முகவரிக்கு உள்ளாடைகளை டெலிவரி செய்ய தனது கிரெடிட் கார்டை ஜேசு விமலன்பயன்படுத்தியிருந்தார்.
இதனால் அவர் எளிதாக மாட்டிக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications