திமுகவில் இணைந்த சுயேச்சை எம்எல்ஏ அப்பாவு
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபைத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு, திடீரென திமுகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்பாவு, மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது அதில் இணைந்தார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் தமாகா-அதிமுககூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு ராதாபுரம் ஒதுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பாவு, சுயேச்சையாகப் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார்.
இந் நிலையில் தமாகா, மீண்டும் காங்கிரஸில் இணைந்தது. ஆனால் அப்பாவு காங்கிரஸில் சேரவில்லை. மாறாக அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வந்தார்.
சட்டசபையிலும், ராதாபுரம் தொகுதியிலும், மக்கள் பிரச்சினைகளுக்காக அதிக அளவில் குரல் கொடுத்துள்ளார் அப்பாவு.தொகுதியிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தொகுதி மக்களால் நெருங்கக் கூடிய சாதாரண மனிதர் என்ற பெயர் அப்பாவுக்கு உண்டு. ஜெயலலிதாவின் அன்பையும் அவர்பெற்றிருந்தார்.
ஆனால், தனது தொகுதியில் மணல் கொள்ளையில் அதிமுக தலைமைக்கு வேண்டிய சிலர் ஈடுபடவே அதை எதிர்த்தார். இதனால்அதிமுக தலைமைக்கும் அப்பாவுக்கும் இடையே பிரச்சனை உருவானது.
இரு முறை வெவ்வேறு வழக்குகளில் அப்பாவு கைது செய்யப்பட்டார். போலீசாரின் டார்ச்சர் தொடர ஆரம்பித்தது.
இந் நிலையில் சென்னைக்கு வந்த அப்பாவு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்து, கட்சியில் அப்பாவு இணைந்தபோது, பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கடந்த சில காலமாகவே திமுகவில் சேருவது குறித்து ஸ்டாலினுடன் அப்பாவு பேசி வந்ததாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications