கராத்தேவுக்கு கதவு திறக்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் சோனியா காந்தியின் வலது கரமுமான அம்பிகா சோனியை சென்னை மாநகராட்சியின்தலைமறைவு துணை மேயர் கராத்தே தியாகராஜன் சந்தித்து தன்னை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கோரிவிண்ணப்பம் கொடுத்தார்.

அதே போல சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களையும் கராத்தேசந்தித்தார். இதனால் விரைவில் அவர் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.

திடீரென முதல்வர் ஜெயலலிதாவின் கடும் கோபத்திற்கு ஆளான கராத்தே தியாகராஜன், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக்கூறி தலைமறைவாக உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இந் நிலையில் திடீரென தலைமறைவிலிருந்து வெளியே வந்து டெல்லி இண்டியா கேட்டில் வைத்து சன் டிவி நிருபரை சந்தித்துபேட்டி அளித்தார் கராத்தே.

இந்தப் பின்னணியில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்திற்குச் சென்ற கராத்தே தியாகராஜன், அங்கு அகில இந்திய பொதுச்செயலாளர் அம்பிகா சோனியை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி மனு கொடுத்தார்.

பின்னர் அம்பிகாவின் துணையுடன் அகமத் படேலையும் மூத்த தலைவர்களையும் சந்தித்தார். அப்போது தனக்கு காங்கிரஸ்அடைக்கலம் தராவிட்டால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கராத்தே கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மூப்பனாரின் காலத்தில் காங்கிரசுக்காக தான் பாடுபட்டது, குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி இறந்தபோது அந்தப்பொதுக் கூட்ட மேடையில் தான் இருந்ததையும் நினைவுபடுத்திய தியாகராஜன் தன்னை கட்சியில் சேர்க்கக் கோரினார்.

அம்பிகா சோனியிடம் தந்த மனுவில், நூறாண்டுகால பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரவிரும்புகிறேன். இக்கட்சியிலிருந்து வெளியேறியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், வருத்தம்தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் என்னை காங்கிரஸில் சேர்த்தால், கட்சியின் உண்மையான தொண்டனாக செயல்படுவேன், கட்சியின் வளர்ச்சிக்காககடுமையாக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் கராத்தே.

பின்னர் செய்தியாளர்களிடம் அம்பிகா சோனி பேசுகையில், நான், மோதிலால் வோரா, அகமது படேல் ஆகியோர் கொண்ட 3பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேரக் கோரி விண்ணப்பம்அளித்துள்ளவர்கள் குறித்து இக்குழு பரிசீலிக்கும்.

கராத்தே தியாகராஜனை சேர்ப்பது குறித்தும் பரிசீலித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அறிக்கை கொடுப்போம். எந்தமுடிவாக இருந்தாலும் அதை சோனியாதான் எடுப்பார் என்றார் சோனி.

கராத்தே தியாகராஜனை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள் ஆட்சேபம்தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கராத்தேவை எதிர்த்து சென்னை நகரில் சுவரொட்டிகளையும் காங்கிரசார் ஒடட்டியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டங்களில், ராயபுரம் மனோ உள்பட பல காங்கிரஸ் கவுன்சிலர்கள் பலமுறைதாக்கப்பட்டுள்ளனர். அத்தனைக்கும் கராத்தே தியாகராஜன்தான் காரணம். அப்படிப்பட்ட கராத்தேவை மீண்டும் காங்கிரஸில்சேர்க்கக் கூடாது என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிற நிலையில், எங்கு இருக்கிறாரோ அங்கு விசுவாசமாக உழைக்கும் கராத்தேதியாகராஜன் போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் தவறில்லை என்று காங்கிரஸில் இன்னொரு தரப்பினர் கருத்துதெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கராத்தேவை சேர்ப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடமும் ஆலோசனை நடத்த காங்கிரஸ்மேலிடம் முடிவு செய்துள்ளது.

தியாகராஜனுக்காக முரளி தியோரா, மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட தலைவர்களும் சோனியா காந்தியிடம் பேசியுள்ளனர்.

இதற்கிடையே தன்னைக் கைது செய்தால், மாநகராட்சி முறைகேடுகளில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு உள்ளதொடர்புகளை அம்பலப்படுத்துவேன் என்றும் தியாகராஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+