மேலும் 60,000 எச்1பி அமெரிக்க விசாக்கள்
வாஷிங்டன்:
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சாப்ட்வேர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களுக்கு இந்த ஆண்டுகூடுதலாக 60,000 எச்1 பி விசாக்களை வழங்குவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோட்டாவான 65,000 எச்1 பி விசாக்கள் அனைத்தும் வினியோகிக்கப்பட்டுவிட்டன. இதில்பெரும்பாலானவை இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கே வழங்கப்பட்டன.ஆனாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த விசா கோரி விண்ணிப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை பல லட்சமாகஉள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள்.
இதையடுத்து இந்த விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அமெரிக்க அரசை அந் நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள்வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து மேலும் 60,000 எச்1 பி விசாக்களை வழங்கலாம் என அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக அந் நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ளது.
எச்1 பி விசாவுக்கு கோட்டாவையே ரத்து செய்யுமாறு மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் அந் நாட்டு அரசிடம் வலியுறுத்திவருகிறார். மிக அதிக அளவில் சாப்ட்வேர் நிபுணர்கள் தேவைப்படுவதால் கோட்டாவை ரத்து செய்துவிட்டு தேவைப்படும்அளவுக்கு விசாக்களை வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்.
ஆனால், இதனால் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் குறையும் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள்எழுந்துள்ளன. செலவை மிச்சப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களும் தங்களது கிளைகளை வேறு நாடுகளில் தொடங்கஆரம்பித்துவிட்டதால், எச்1 பி விசாவின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் செவி சாய்க்கும் என்றே தெரிகிறது.இதனால் கூடுதலான அளவில் விசாக்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications