மத்திய போலீஸ் பாதுகாப்பில் கராத்தே தியாகராஜன்?!
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், சண்டிகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய சென்னை போலீஸார் டெல்லிவிரைந்துள்ளனர். ஆனால் போலீஸாரின் வருகையை அறிந்த கராத்தே தியாகராஜன் அங்கிருந்து தப்பிவிட்டார்.இருப்பினும் கராத்தேவைக் கைது செய்யாமல் சென்னைக்குத் திரும்புவதில்லை என்று சென்னை போலீஸார் மும்முரமாக அவரைத்தேடி வருகிறார்கள்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர மனு கொடுத்து காத்துள்ள கராத்தே தியாகராஜன் தற்போது பஞ்சாப் மாநிலத் தலைநகர்சண்டிகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. எனவே கராத்தேவுக்கு இதுதான் சரியான பாதுகாப்பாகஇருக்கும் என்று சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சண்டிகரில் கராத்தே தங்கவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சண்டிகரில் அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. விரைவில் அவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாககாங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பு, கராத்தேவை கட்சியில் சேர்க்க கடுமையாக எதிர்த்து வருகிறது.சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 11 பேர் இதுதொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தி, அம்பிகா சோனி ஆகியோருக்குதந்திகள் அனுப்பியுள்ளனர்.
வாசனின் தீவிர ஆதரவாளரும், வட சென்னை காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி காங்கிரஸ் தலைவருமான ராயபுரம் மனோதலைமையில் கவுன்சிலர்கள் சோனியாவுக்கு அனுப்பியுள்ள தந்தியில்,
சோனியா காந்தி தமிழகம் வந்தபோது, அதிமுகவில் சேர்ந்து காங்கிரஸுக்க அவப் பெயரை தேடித் தந்தவர் கராத்தே. தற்போதுஅதிமுகவில் அவருக்கு நெருக்கடி என்பதால் மீண்டும் காங்கிரஸுக்கு வர விரும்புகிறார். எனவே காங்கிரஸுக்கும்,சோனியாவுக்கும் அவர் விசுவசமாக இருப்பார் என நம்ப முடியாது.
கராத்தே தியாகராஜனுக்கு தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு எதுவும் கிடையாது. கடந்த மாநகராட்சித் தேர்தலிலும் கூட மிகவும்குறைந்த வாக்குகளில்தான் கராத்தே வெற்றி பெற்றார். மாநகராட்சிக் கூட்டத்தில் பலமுறை காங்கிரஸ் உறுப்பினர்களைவெளியேற்ற போலீஸாரை ஏவி அவமரியாதை செய்துள்ளார் கராத்தே.
எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications