வேலூர் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் உயிர்நாடியான பாலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 200க்கும்மேற்பட்ட கரையோர கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெத்தமங்கலம் அணைதிறந்து விடப்பட்டுள்ளதால்தான் பாலாற்றில் அதிக அளவு நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தத் தண்ணீர் தற்போது வேலூரைத் தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்குஇருப்பதால், ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில், கரையோரப் பகுதிகளில் 200க்கும்மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கடும் வறட்சிப் பிரதேசமான வேலூர் மாவட்ட மக்கள், பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதை சந்தோஷமாக பார்த்துவருகின்றனர். இந்தத் தண்ணீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெருமளவில் உதவி புரியும் என அவர்கள் நம்புகின்றனர்.
பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மேம்பாலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெள்ளநிலை மோசமானல் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொண்டுவருகிறது.
இதற்கிடையே கிருஷ்ணகிரியில் கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ழன.
மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தளி மற்றும் கிருஷ்ணகிரி படேதளவாய் ஏரி உட்பட நான்கு ஏரிகள் நிரம்பியதில், தளி ஏரிஉடைந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கிருஷ்ணகிரி நகரின் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரியை அடுத்த பந்தாரப்பள்ளி ஏரி நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவதால் கிருஷ்ணகிரி-ஓசூர் நெடுஞ்சாலையில்200 மீட்டர் தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்துக்கும் பெங்களூருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி மற்றும் ஆத்துக்காடு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 27 பேரை ராணுவஹெலிகாப்டர்கள் பத்திரமாக மீட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications