காஞ்சியை கலக்கும் பாலாற்று வெள்ளம்
காஞ்சி - சென்னை:
வேலூர் மாவட்டத்தைக் கலக்கிய பாலாற்று வெள்ளம் தற்போது காஞ்சிபுரத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.இதனால் பாலாறு கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தின் நந்தி துர்கா மலையில் உற்பத்தியாகி, கர்நாடகம், ஆந்திரம் வழியாக வாணியம்பாடி அருகேதமிழகத்திற்குள் நுழைந்து காஞ்சிபுரத்தில் முடிவுறுகிறது பாலாறு.இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள பல ஏரிகள் உடைந்து அந்தத் தண்ணீரும் பாலாற்றில் கலந்ததால் பலஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, பெரும்பாக்கம் வழியாகதற்போது காஞ்சிபுரத்தை நெருங்கியுள்ளது பாலாற்று வெள்ளம்.
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் வேகத்தைத் தணிக்க பல்வேறு கால்வாய்கள், ஏரிகளுக்கு தண்ணீரைதிருப்பி விட்டு வருகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை நெருங்கி வரும் பாலாற்று வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்ககாஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செவிலிமேடு உள்ளிட்ட பாலாற்றங்கரையோரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் ஆலப்பட்டி ஏரி, உடைசல்பட்டி ஏரி, நார்லப்பள்ளி ஏரியில்உடைசல் ஏற்பட்டு, ஏரித் தண்ணீர் வயல் வெளிகளை மூழ்கடித்துள்ளது. நிரம்பி வழியும் ஏரிகள் அனைத்தும்உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை:
அனுமந்தீர்த்தம் தென் பெண்ணையாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் கரையோரங்களில் இருந்த 40க்கும்மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. அங்குள்ள 21 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அனுமந்த் தீர்த்தம்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குள்ளும் நீர் புகுந்தது.
நாமக்கல்:
![]() |
நாமக்கலில் உள்ள எருமப்பட்டி எரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அந்த ஏரியும் எந்த நேரத்திலும் கரைஉடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஏரிக்கரை உடைந்தாலும் வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள்வரும் அபாயம் இல்லாததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களைஇணைக்கும் பள்ளிபாளையம் பாலத்தில் வெள்ளம் புரண்டோடுகிறது.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கிய நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழைவிசயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்துபெய்து வரும் மழை விவசாயிகளையும், வியாபாரிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
மழை தொடர்ந்து பெய்வதால் டெல்டா பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா பயிர்கள்பாதிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
![]() |
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.72 லட்சம் கன அடி தண்ணீர் வருவதால் நூறாண்டு பழமையான கொள்ளிடம்இரும்பு மேம்பாலம் மூடப்பட்டது. மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீர் முக்கொம்பை அடைகிறது.
இதனால் காவிரி ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திருச்சிமக்கள் பீதியடைந்துள்ளனர். திருச்சி தென்னூர், உய்யக்கொண்டான் வாய்க்காலில் வெள்ள அபாயத்தை தடுக்கமணல் மூடைகள் அடைக்கப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாதகனமழையால் திருச்சி நகரம் திணறிக் கொண்டிருக்கிறது.
கரூர்:
காவிரி வெள்ளத்தால் கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தாலுகாக்கள்பாதிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வாழை விவசாயம் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. மாயனூர் வெள்ளப் பெருக்கால் நெரூர் அக்ரஹாரத்தில் தண்ணீர் புகுந்ததுடன் சதாசிவபிரம்மேந்திரர் சமாதியை தண்ணீர் சூழ்ந்தது.
இதே போல பல துணைவாய்க்கால்கள் உடைந்து வெள்ளம் பாய்ந்ததில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.வாழை, கரும்பு, நெற்பயிர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையிலும், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அபாயம்இன்னும் ஓயவில்லை. அணையிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர பகுதிகள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூருக்கும் பூலம்பட்டிக்கும் இடையில் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கோல்நாயக்கன் பட்டி,பொறையூர், கூட்டக்கல் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடுதுண்டிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications