ரஹ்மான் வீட்டில் ரூ.6 கோடி, விவேக்கிடம் ரூ.1.25 கோடி! த்ரிஷாவிடம் கிலோ கணக்கில் நகை!
சென்னை:
வருமான வரி சோதனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் ரூ. 6 கோடி பணம் சிக்கியது. அதேபோல விவேக் வீட்டில் ரூ. 1.25 லட்சம் கருப்புப் பணம் சிக்கியது.
சென்னை வருமான வரித் துறை அதிகாரிகள் நடிகர்-நடிகைளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்தினார்கள்.விஜய், விக்ரம், விவேக், திரிஷா, சினேகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது.
இவர்களில் ஏ.ஆர். ரகுமான் வீட்டில் அதிக அளவு ரொக்கப் பணம் ரூ. 6 கோடி சிக்கியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அவர் உடனடியாக ரூ. 90 லட்சம் வருமான வரி கட்டியதாகவும் தெரிகிறது.
நடிகை திரிஷா வீட்டில் கணக்கில் காட்டாத நகைகள் கிலோ கணக்கில் சிக்கியுள்ளது. அவருடைய வங்கிலாக்கருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் தனது கணக்கில் காட்டாத கறுப்பு பணம் ரூ. 1.25 கோடி கைப்பற்றப்பட்டதாக ஒரு அதிகாரிதெரிவித்துள்ளார்.
சோதனைக்குள்ளான நடிகர்-நடிகைகள் கிரெடிட் கார்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் இந்த நடிகர்களின் வங்கி லாக்கர்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் மிகமுக்கியமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சில நடிகர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் -நடிகைகளின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வருவான வரி அதிகாரிகள்சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications