For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக பெண் கவுன்சிலர் பலியான விபத்து: காரை ஓட்டியது மதுரை மேயர்!-ஆள் மாறாட்ட முயற்சி!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி விபத்துக்குள்ளான காரை ஓட்டியது மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரன் தான்என்று தெரியவந்துள்ளது. ஆனால், தனக்குப் பதிலாக போலியாக ஒருவரை போலீசில் சரணடைய வைத்துள்ளார் ராமச்சந்திரன்.

செனா என்று ழைக்கப்படும் செ.ராமச்சந்தின் திமுகவைச் சேர்ந்தவர். ஏகப்பட்ட லாரிகள், செங்கல் சூளைகள் வைத்து நடத்திவருபவர். ரவுடித்தனத்துக்கு ஒரு கும்பலை வைத்துக் கொண்டு மதுரையில் மட்டமான வேலைகள் செய்து வரும் நபர்களில்முக்கியமானவர் இவர்.

இவர் தான் மதுரையின் மேயர். சமீபத்தில் இவரது கார் மதுரை சின்ன உடைப்பு அருகே விபத்தில் சிக்கியது. அதிலிருந்தபாஜகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்.

மதுரை மேயரின் காரில் பெண் கவுன்சிலர், அதுவும் பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் எதற்குப் போனார் என்ற சந்தேகம் எழுந்தது.அந்தக் காரில் ராமச்சந்திரனும் இருந்ததாக அப்போதே சந்தேகம் எழுந்தது.

இந் நிலையில் காரை நான் தான் ஓட்டிச் சென்றேன் என்று கூறி கண்ணன் என்பவர் பெருங்குடி போலீசில் சரணடைந்தார். ஆனால்,அவர் முன்னுக்குப் பின் முரணான உளறினார். இதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் போலீசார் கவனித்துவிசாரித்தபோது உண்மைகளைக் கொட்டினார்.

அவர் தந்துள்ள வாக்குமூலத்தில் காரை ஓட்டியது செ.ராமச்சந்திரன் தான் என்பதும், ராமச்சந்திரனுக்கும் பாண்டீஸ்வரிக்கும்இடையே ரொம்ப நெருக்கமான நட்பு இருந்ததும் தெரியவந்துள்ளது.

கண்ணனின் வாக்குமூல விவரம்:

நான் மதுரை சிந்தாமணியில் உள்ள ஏவிஎஸ் பொரிகடலை கம்பெனியில் வேன் டிரைவராக உள்ளேன். கடந்த 25ம் தேதிபொறிகடலை கம்பென் கேட்டை யாரோ தட்டினார்கள். நான் போய் திறந்தேன். அப்போது மதுரை மேயர் ராமச்சந்திரன் மிகவும்பதற்றத்துடன் உள்ளே வந்தார்.

அவரது இடது முழங்கை, உதட்டில் ரத்தக் காயம் இருந்தது. பதற்றமாக வந்த ராமச்சந்திரன் எனது நிறுவனத்தின் உரிமையாளர்விநாயகமூர்த்தியிடம் போய் பேசினார். சிறிது நேரம் கழித்து என் நிறுவன அதிபர் என்னைக் கூப்பிட்டார்.

ராமச்சந்திரன் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகிவிட்டது. இதனால் காரை நீ தான் ஓட்டினாய் என்று சொல்லி போலீசில்சரணடைந்துவிடு. மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உனக்கு எல்லா உதவிகளும் செய்கிறோம் என்றனர்.

இதையடுத்து ராமசந்திரன் தான் கட்டியிருந்த நீலக் கலர் கைலியைக் கழற்றி என்னிடம் தந்து கட்டிக் கொள்ளச் சொன்னார். அந்தக்கைலியில் ரத்தக் கறை இருந்தது.

இதையடுத்து அந்தக் கைலியைக் கட்டிக் கொண்டு நான் போய் போலீசில் சரணடைந்தேன். அந்தக் காரை நான் ஓட்டவேஇல்லை. எனக்கும் விபத்துக்குள் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு கண்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந் நிலையில் செ.ராமச்சந்திரன் தலைமறைவாகிவிட்டார். தன்னை போலீசார் பிடித்தால் தனது உடல் காயங்கள் குறித்து பதில்சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதற்கிடையே ஆள் மாறாட்டம் செய்த டிரைவர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கண்ணனின் வாக்குமூலத்தின்அடிப்படையில் ஆள்மாறட்டத்துக்கு உதவிய பொரிகடலை நிறுவன உரிமையாளர் விநாயகமூர்த்தியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து மேயர் ராமச்சந்திரனையும் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தஎஸ்பி அமித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படையினர் ராமச்சந்திரனின் மதுரை விரகனூர் வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவர் வெளியூர்போய்விட்டதாக அவரது வீட்டினர் புருடா விட்டனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகவே தெரிகிறது.

இதற்கிடையே ராமச்சந்திரன் திருச்சியில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் தனிப்படை திருச்சி விரைந்துள்ளது. இந்நிலையில் கைதைத் தவிர்க்க முன் ஜாமீன் கோரும் நடவடிக்கையில் செனா ஈடுபட்டுள்ளார்.

இது தவிர விபத்தில் பலியான பாண்டீஸ்வரிக்கும் செ.ராமச்சந்திரனுக்கும் இடையே கவுன்சிலர்-மேயர் என்ற நிலையையும்தாண்டி மிக நெருக்கமான நட்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பலியான பாண்டீஸ்வரி திருமணமானவர் என்பதும்அவருக்கு குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X