தமிழக- வட மாநில ரயில்கள் இன்றும் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து விசாகப்பட்டனம், பெங்களூர் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சென்னையை பயங்கரமாக மிரட்டிய புயல் தற்போது ஆந்திராவைக் கடந்துள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பலத்த சூறாவளிக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனம், மசூலிப்பட்டனம், ஓங்கோல் உள்ளிட்ட பல்வேறு கடலோர நகரங்கள்மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த புயல், மழை காரணமாக ரயில் பாதைகள் கடும் சேதமடைந்துள்ளன. பெங்களூரிலும் மழை நிலைமையை மோசமாக்கியது.இதனால் கேரளா தவிர்த்து தென் மாநிலங்கள் அனைத்திலும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஹைதராபாத், விஜயவாடா, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஹெளரா உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் 14ரயில்கள் இன்றும் (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல கோவை, திருச்சி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை -ஹெளரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சென்னை-விஜயவாடாபினாகினி எக்ஸ்பிரஸ், சென்னை-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், சென்னை-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், சென்னை-காகிநாடாசர்கார் எக்ஸ்பிரஸ், சென்னை-ஹெளரா மெயில்,
சென்னை-வாரணாசி மெயில், கன்னியாகுமரி-ஜம்முதாவி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், மதுரை-ஜம்முதாவி இணைப்பு எக்ஸ்பிரஸ்ரயில், கன்னியாகுமரி -ஹெளரா எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், மதுரை நிஜாதீன் தமிழ்நாடு சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ்,
திருவனந்தபுரம்-இந்தூர் வாராந்திர ரயில், சென்னை -ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை.
இதற்கிடையே, சென்னை பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே சேதமடைந்திருந்த தண்டவாளத்தை மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஆர்.வேலு பார்வையிட்டார். அந்தப் பாதை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்துதண்டவாளத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
புயல், மழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை தற்போது சீரடைந்து ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் தண்டவாளங்கள் ஆங்காங்கே மழையில் ஊறிக் கிடப்பதால், ரயில்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயேஇருக்கிறது, ரயில்களும் மிகவும் மெதுவாகவே இயக்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications