கராத்தேவை பிடிக்க மேலும் 3 தனிப்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கராத்தே தியாகராஜனை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கராத்தே தியாகராஜன் டெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸில் சேர முயற்சி செய்தார். அதன்படி காங்கிரஸ் பொதுசெயலாளர் அம்பிகா சோனியை சந்தித்து காங்கிரஸில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு முறைப்படி கடிதமும்கொடுத்தார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து சென்ற போலீசார் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்துவந்தனர்.

மேலும் நேற்று காலை சென்னையிலிருந்து டெல்லிக்கு ஒரு போலீஸ் தனிப்படை விரைந்தது. அங்கு கராத்தேவைபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. இருந்தாலும் அவர் சிக்கவில்லை.

இந்த நிலையில் டிஜிபி அலெக்சாண்டர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபிகேவிஎஸ் மூர்த்தி, உளவுத்துறை கூடுதல் டிஜிபி ராமானுஜம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது.

இதில் ஏற்கனவே 2 போலீஸ் படைகள் கராத்தேவை பிடிக்க சென்றுள்ள நிலையில் மேலும் 3 தனிப்படைகள்உருவாக்கப்பட்டது. இத்துடன் கராத்தேவை பிடிக்க சென்றுள்ள போலீஸ் தனிப்படையின் எண்ணிக்கை 5ஆகியுள்ளது

இதன் படி உதவி கமிஷனர் முரளி தலைமையில் ஒரு குழு மும்பை மற்றும் உத்திரபிரதேசத்திற்கு சென்றிருக்கிறது.2வது குழு உதவி கமிஷனர் அன்பு மொழி தலைமையில் டெல்லி சென்றுள்ளது. 3வது குழு இன்ஸ்பெக்டர் மகாகவிமுத்துக் குமார் தலைமையில் கொச்சி சென்றிருக்கிறது.

துணை மேயர் கராத்தே தியாகராஜன் நேபாள நாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+