மருந்து தொழிற்சாலையில் விபத்து - 2 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
15 பேர் காயமடைந்தனர். சென்னை அருகே மாமல்லபுரம் சாலையில் உள்ளது திருப்போரூர் கிராமம். இதற்குஅருகே உள்ள ஆலத்தூல் ஆர்க்கிட் என்ற தனியார் மருந்து நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை உள்ளது.இங்கு 10,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இங்கு பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்பட்டுவெளிநாடு மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தத் தொழிற்சாலையின் பேஸ் 24 என்ற இடத்தில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனத்தின் வீரியத்தைக்குறைக்கும் பணிகள் நடைபெறும். இந்த பிரிவில் பெரிய பாய்லர் உள்ளது.
இந்த பாய்லருக்கு அருகே வியாழக்கிழமை இரவு கிட்டத்தட்ட 20 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரவு எட்டரை மணி வாக்கில் திடீரென பாய்லரில் தீவிபத்து ஏற்பட்டது. மிகப் பெரும் சப்தத்துடன் பாய்லர்கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பல அடி உயரத்துக்கு பாய்லர் எரிய ஆரம்பித்தது.
பயங்கர சப்தத்துடன் பாய்லர் எரிந்தது பையனூர், மகாபலிபுரம், ஆலத்தூர், திருப்போரூர் என பலகிராமங்களுக்குக் கேட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தரப்பட்டு, செங்கல்பட்டு,திருக்கழுக்குன்றம், நீலாங்கரை, திருப்போரூர், காஞ்சிபுரம் என பல பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள்விரைந்து வந்தன.
நீண்ட நேரம் போராடிய பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த கோர விபத்தில், இசக்கித்து என்ற வேதியியல்நிபுணரும், இன்னொரு தொழிலாளியும் சிக்கி இறந்தனர்.
15 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசன்,மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அமல்ராஜ், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ்உள்ளிட்டோர் நேரில் பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா இந்த ஆலைக்கு அருகே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications