சென்னை பல்கலைக்கழக முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கவர்னர் பரிந்துரை
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது சிபிஐவிசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து கவர்னர் அலுவலகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் மீது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சரமாரியாகபுகார் தெரிவித்தனர்.இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தக் கோரி பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
கடைசியாக பேராசிரியர்கள் 10 பேர் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்து 250 பக்க புகார் மனு ஒன்றைஅளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய புகார்கள்:
சென்னை பல்கலைக்கழக செனட் கட்டடத்தை சீரமைப்பதற்காக தனி நிதி வசூலிக்கப்பட்டது. இந்த நிதியில்முறைகேடு நடந்துள்ளது. செனட் சீரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்படவில்லை. நேரடியாக கான்ட்ராக்ட்விடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வைப்புத் தொகை பல்வேறு வங்கிகளில் 230 கோடி ரூபாய் வரை உள்ளது.
இதில் ஒரு பகுதியை ஆதாயத்திற்காக வேறு வங்கிக்கு மாற்றியதில் கமிஷன் பெறப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி மாணவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் மட்டுமே பணம் கட்ட வேண்டும் என்று தவறாகஉத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கட்டும் பணம் முறையாக பல்கலைக்கழக கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனம்,நிர்வாகம் ஆகியவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து கவர்னர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக கூறப்படுகிறது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்த புகார்களை விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டுவிட்டார் என்றும் வதந்திகள் பரவின.
கவர்னர் நேரடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கோர்ட் நேரடியாக உத்தரவிட்டால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு அனுப்ப முடியும் என்று சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கவர்னரிடம் புகார் கொடுத்த பேராசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கமுயற்சி எடுக்கப்பட்டது.
இதற்காக சென்னை பல்கலைக்கழகம் சார்பில் மூன்றுபேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டி விசாரித்து பேராசிரியர்கள் செய்தது தவறு என்றும் 150வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டுஅவர்களை மன்னித்து விட்டுவிடலாம் என்றும் கூறி 11 பக்க அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து வரும் 7ம் தேதி நடக்கவுள்ள சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications