அத்வானி, வாஜ்பாய் மீது விஎச்பி மீண்டும் தாக்கு
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சி வாஜ்பாய், அத்வானி ஆகிய 2 பேரைச் சுற்றியே செயல்படுவதாக விஷ்வ இந்து பரிஷத்குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பரிஷத்தின் துணை தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் கூறியதாவது:சங்பரிவார் அமைப்புகளைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தக் குழுவின்முன்னிலையில் தான் பாஜகவின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இப்போது பாஜகவில் அத்வானி, வாஜ்பாய் இருவர் மட்டுமே முக்கிய முடிவு எடுப்பவர்களாக செயல்படுகிறார்கள்.வேறு யாரின் கருத்தையும் கேட்பது கிடையாது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் சொன்னது போல் பாஜகவில் வாஜ்பாய், அத்வானியை சுற்றியே அனைத்தும்நடைபெறுகிறது. கட்சி உறுப்பினர்களை கலந்தாலோசித்து ஒருங்கிணைந்து முடிவெடுப்பது கிடையாது என்பதுஉண்மையாகிறது.
இந்த நடவடிக்கை கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும். ஒருங்கிணைந்த தலைமை இருந்தால் தான் கட்சி வளரும்.
கட்சியில் சர்வாதிகாரப் போக்கு இருக்கக் கூடாது. நாங்கள் அந்த சர்வாதிகாரப் போக்கை விரும்பவில்லை.
கிரிக்கெட் அணியில் கேப்டனின் முடிவிற்கு மற்ற வீரர்கள் கட்டுப்பட்டாலும், அந்த முடிவை கேப்டன் மற்றவீரர்களுடன் கலந்தாலோசித்தே வெளியிடுவார். கேப்டனே தனிச்சையாக முடிவு எடுப்பதில்லை. அது போல கட்சிதலைவரே முடிவை சொல்லட்டும் அதற்கு முன்பு கட்சி உறுப்பினர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications