இன்ஸ்பெக்டரும் ரெளடி தோஸ்துகளும்!
மதுரை:
ரவுடிகளுடன் நெருங்கிப் பழகி முறைகேடுகளில் ஈடுபட்ட மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் டிஸ்மிஸ்செய்யப்பட்டார்.
மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுப்புராஜ். அனைத்து ரவுடிகளின் விவரங்களையும்தெரிந்து வைத்திருந்ததால் ரவுடிகளை கட்டுப்படுத்தும் தனிப் பிரிவுக்கு பொறுப்பு வகித்தார்.இந்த நிலையில் சுப்புராஜ் ரவுகளுடன் நெருக்கமாக பழகி அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக புகார்கள் எழுந்தன.
கரிமேட்டைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரை முன் விரோதம் காரணமாக கவுன்சிலர் சிங்கத்தேவன் தரப்பினர்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.
இக்கொலை நடப்பது கரிமேடு ஆய்வாளராக இருந்த சுப்புராஜூவுக்கு முன்பே தெரியும் என்றும், அதை தடுத்துநிறுத்தாமல் என் ஸ்டேஷன் எல்லைக்குள் இந்தக் கொலையை செய்ய வேண்டாம் என்று சுப்புராஜ் அட்வைஸ்தந்ததால் செல்லூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வைத்து அந்தக் கொலை நடந்ததாகவும்கூறப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா உள்பட 2 பேர் துப்பாக்கியால்சுட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் ஆலடி அருணா கொலை செய்யப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு முக்கியகுற்றவாளி ஒருவனது செல்போனை இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தொடர்பு கொண்டு பேசியதும் இப்போதையவிசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். ரவுடிகள், சுப்புராஜ் தொட ஏடிஎஸ்பி அண்ணாமலைச்சாமிதலைமையில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணையில் ரவுடிகளுடன் சுப்புராஜ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.
எனவே அவரை டிஸ்மிஸ் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவை சென்னை கமிஷனராக இருந்தவிஜயகுமார் சுப்புராஜிடம் வழங்கினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications