பிரேமானந்தாவுக்கு கண் ஆபரேஷன்
சென்னை:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆசிரமம் அமைத்து பலான வேலைகளில் ஈடுபட்டு, கொலைவழக்கில் சிக்கி கைதானவர் பிரேமானந்தா. அவரது செக்ஸ் லீலைகள் தமிழகத்தையே உலுக்கின.கொலை மற்றும் செக்ஸ் வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம்அனுபவித்து வருகிறார் பிரேமானந்தா.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமானந்தாவுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவைஉள்ளது. அத்தோடு தற்போது கண்ணில் புரை ஏற்பட்டுள்ளது.
இதனால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால்அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக ரத்த பரிசோதனை நடத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேமானந்தாவை போலீஸார் பலத்தபாதுகாப்புடன் மிகவும் ரகசியமாக கொண்டு சென்றனர்.
பரிசோதனைக்காக பிரேமானந்தாவிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டது.
பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் அவரது கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications