பிகார் சிறை மீது நக்ஸல்கள் பயங்கர தாக்குதல்
ஜெகானாபாத்:
பிகாரின் ஜெகனாபாத் சிறைச் சாலை மீது நேற்றிரவு மாபெரும் தாக்குதல் நடத்திய நக்ஸலைட்டுகள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததங்களது தலைவரையும், மேலும் 340 கைதிகளையும் விடுவித்தனர். இத் தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இது தவிர தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் நில முதலாளிகளுக்கு ஆதரவான ரன்வீர் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த 15பேரையும் கடத்திச் சென்றனர்.இதையடுத்து பிகாருக்கு பாரா மிலிட்டரிப் படைகளின் 25 கம்பெனிகளை உடனடியாக அனுப்புமாறு மத்திய அரசுக்கு அம் மாநில டிஜிபிகோரிக்கை விடுத்துள்ளார்.
பிகாரில் 4 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. 3வது கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தடை செய்யப்பட்ட சிபிஐமாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த நக்ஸலைட்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு ஏணிகளுடன் சிறைச் சாலைக்கு வந்த நக்ஸலைட்டுகள் அதன்மூலம் சுவர் ஏறி சிறைக்குள் குதித்தனர். பின்னர் அங்கு காவலுக்குஇருந்த இரு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து மேலும் பல நக்ஸல்கள் சிறைக்குள் நுழைந்தனர்.
இதையடுத்து குண்டுகளை வீசி பெரும் களேபரத்தை ஏற்படுத்திய நக்ஸல்கள், அங்கிருந்த அறைகளின் பூட்டுகளை உடைத்து கைதிகளைவிடுவித்து ஓடச் சொல்லி மிரட்டினர். தப்பிச் செல்லாத கைதிகளை ஒலிப் பெருக்கி மூலம் நக்ஸல்கள் மிரட்டினர்.
சிறைச்சாலை முழுவதும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தப்பியோடாவிட்டால் சாக வேண்டியது தான் என்றும் மிரட்டினர்.இதையடுத்து கைதிகள் தப்பியோடினர்.
பின்னர் தங்களது தலைவர் ஒருவரையும் சிறையில் இருந்து மீட்ட நக்ஸலைட்டுகள், சிறையில் தனி செல்லில் அடைக்கப்பட்டிருந்த ரன்வீர்சேனா கைதிகளை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
போகும்போது நக்ஸல் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கைதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
இதனால் ஜெகானாபாத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இத் தாக்குதலையடுத்து இன்று சிறைச் சாலைக்குச் சென்ற ஜெகானாபாத்கலெக்டரை கைதிகளின் உறவினர்கள் தாக்கினர். இதைத் தொடர்ந்து சிறைச் சாலையின் அனைத்து வாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளஅங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச் சாலையின் உள்ளே இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், வயர்கள், பேட்டரிகள், போலீஸ் உடைகள் ஆகியவையும்மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நக்ஸலைட்டுகள் போலீஸ் உடையில் சிறைச் சாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதுஉறுதியாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஒரு நக்ஸலைட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சிறைச் சாலையில் வெளியே நின்றிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது இன்று பிகார் போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தினர்.இதில் இந்து பத்திரிக்கையின் நிருபர் பால்சந்த் உள்பட பலர் காயமடைந்தனர். இதில் பல டிவி நிருபர்களின் கேமராக்களும்உடைக்கப்பட்டன.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க பெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நக்ஸலைட்டுகளால் சிறையில் இருந்துகடத்திச் செல்லப்பட்ட 15 ரன்வீர் சேனா ஆதரவாளர்களின் நிலை என்னவானது என்று தெரியவிலலை.
நில முதலாளிகளுக்கு ஆதரவான இந்த அமைப்பினரை நக்ஸல்கள் அவ்வப்போது தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 15 பேரையும்நக்ஸல்கள் கொல்லக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தப்பியோடிய கைதிகளில் பலர் திரும்பி வந்துவிட்டனர். ஆனாலும் 300க்கும் மேற்பட்டவர்கள் திரும்பவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications