சென்னை மேயராகிறார் விஜயராம கிருஷ்ணன்?
சென்னை:
வரும் 21ம் தேதி நடக்கவுள்ள சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை அதிமுக கவுன்சிலர் விஜயராம கிருஷ்ணன் நடத்துவார் எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாநகராட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக வரும் 21ம் தேதி இந்தக்கூட்டம் நடக்கும் என ஆணையர் விஜய்குமார் அறிவித்தார். ஆனால், கூட்டத்தை யார் தலைமையில் கூட்டுவது என்பதில்அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது.முதலில் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளரரும் மாநகராட்சி அதிமுக தலைவருமான கவுன்சிலர் சுகுமார் பாபு தலைமையில்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவரது பெயரை ஜெயக்குமாரும் விஜய்குமாரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரைசெய்தார்கள்.
முதலில் இதற்கு ஓகே சொன்ன ஜெயலலிதா, பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார்.
சுகுமார் பாபுவுக்குப் பதிலாக அதிமுக கவுன்சிலரும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவராகவும் உள்ள விஜயராம கிருஷ்ணன்தலைமையில் கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து விஜயராம கிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடக்கும் என ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர்சாந்தஷீலா நாயர் இன்று உத்தரவு வெளியிட்டுள்ளார்.
விரைவில் விஜயராம கிருஷ்ணனே புதிய துணை மேயராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
டெல்லியில் 3 தமிழக சிறப்பு படைகள்:
இதற்கிடையே கராத்தேவைப் பிடிக்க டெல்லிக்கு மூன்று சிறப்புப் போலீஸ் படைகளை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.அவர்களும் தமிழக உளவுப் பிரிவினரும் கராத்தேவைக் கைது செய்ய தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு கராத்தே தொடர்ந்து தண்ணி காட்டி வருகிறார். இதனால் தமிழக போலீஸ் படைகள் வெறுத்துப் போனநிலையில் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.
சமீபத்தில் இந்தப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் சென்னையில் விபத்தில் சிக்கிப் பலியாகிவிட்டாராம்.இதையடுத்து அவர் டெல்லியில் இருந்து அவசரமாக திரும்பி வந்துள்ளார்.
அதே போல இன்னொரு படையில் இடம் பெற்றுள்ள இன்ஸ்பெக்டரின் பாட்டி இறந்துவிட, அவரும் சென்னை திரும்பிவந்துள்ளார்.
இப்படி போன இடத்தில் எல்லாமே அபச குணமாய் நடக்க டெல்லியில் உள்ள போலீஸ் படையில் இடம் பெற்றுள்ளவர்கள்எரிச்சலில் உள்ளார்களாம். இதற்கிடையே காங்கிரஸ் புள்ளிகளின் உதவியோடு கராத்தை தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவருகிறார்.
திடீரென மலேசியாவில் இருந்து நிருபர்களுக்கு போன் செய்வது, அடுத்த நாள் டெல்லியில் இருந்து கால் செய்வது, மறுநாள்கோவா பக்கத்தில் இருந்து போன் போடுவது, திடீரென டெல்லியில் இண்டியா கேட் அருகே தோன்றி மறைவது, பிரஸ் கிளப்அருகே வந்து போஸ் கொடுப்பது என கராத்தேவும் சும்மா ஜேம்ஸ்பாண்டு ரேஞ்சுக்கு புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
கராத்தேவைக் காப்பாற்றுவதில் மத்திய உளவுப் பிரிவினரின் பின்னணி உதவியும் இருக்குமோ என்று சந்தேகப்படும் தமிழகசிறப்புப் படையினர், டெல்லியில் அவரைப் பிடிப்பது கடினம் என்று கருதுகின்றனவாம்.
இதனால் திரும்பி ஊருக்கு வர அவர்கள் விரும்பினாலும் கராத்தேவைப் பிடிக்காம வரப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதால்,நொந்து போய் டெல்லியை சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.
இவ்வளவு தூரம் இவர்களை அலைய விட்ட கராத்தே இவர்களது கையில் சிக்கினால், சென்னை கொண்டு வரப்படுவதற்குமுன்பாக நன்றாக பதம் பார்க்கப்படுவார் என்று தெரிகிறது. அதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் தான் கராத்தேதொடர்ந்து எஸ்கேப் ஆகியபடி உள்ளார்.
இதற்கிடையே வழக்கம்போல் நிருபர்களைத் தொடர்பு கொண்ட கராத்தே கூறுகையில்,
நான் 28ம் தேதி தான் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை நடத்துமாறு கமிஷ்னருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆனால், நான்அனுப்பிய கடிதம் உண்மையானது தானா என்று சரி பார்த்து வருவதாக கமிஷ்னர் விஜய்குமார் கூறுவது விஷமத்தனம்.
நான் அனுப்பிய கடிதத்தை மதிக்காமல் 21ம் தேதி கமிஷ்னர் கூட்டத்தைக் கூட்டுவது சட்ட விரோதமாகும் என்று கூறியுள்ளார்.
பிடிபட்டதாக பரபரப்பு:
இதற்கிடையே கராத்தேவை தமிழக போலீசார் நேபாளத்தில் வைத்து பிடித்துவிட்டதாக இன்று காலை சென்னையில் செய்திபரவியது. ஆனால், இந்தச் செய்தியை கராத்தே தரப்பு மறுத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications