அரசு மருத்துவமனை: வராண்டாவில் பிறந்த குழந்தை இறந்தது: டாக்டர்கள் அலட்சியம்
சென்னை:
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் டாக்டர்களின் அலட்சியத்தால் வராண்டாவில் பிறந்த குழந்தை பரிதாபமாகஇறந்தது.
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண்ணை உடனடியாக அட்மிட் செய்யாமல் டாக்டர்கள்அலட்சியப்படுத்தியதால் வராண்டாவிலேயே அவர் குழந்தையை பெற்றார், குழந்தை தரையில் விழுந்து இறந்தது.சென்னை தேனாம்பேட்டை எஸ்எம் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது31). ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.அவரது மனைவி வசந்தி (வயது 23). 7 மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன் தினம் திடீரென பிரசவவலி ஏற்பட்டது.
உடனே அவரை அவரது கணவர் மற்றும் வசந்தியின் தாயார் சாரதா ஆகியோர் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்குஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு வசந்தியை பரிசோதித்த டாக்டர்கள் பனிக்குடம் உடைந்து விட்டதால் உடனேஅறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். ஆனால் குறை பிரசவம் என்பதால் பிறந்தவுடன் குழந்தையைஇன்குபேட்டரில் வைத்து பாதுகாக்க வேண்டும், அதற்கு போதிய வசதி இந்த மருத்துவமனையில் இல்லை.
எனவே எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் படி சீட்டு எழுதி கொடுத்து அனுப்பிவிட்டனர். அந்த சீட்டைஎடுத்துக்கொண்டு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வந்த வசந்தியை டாக்டர்கள், நர்சுகள் உடனேமருத்துவமனையில் அனுமதித்து கொள்ளாமல் வராண்டாவிலேயே காக்க வைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பிரசவவலி அதிகமாகி வராண்டாவில் உள்ள பெஞ்சில் இருந்த படியே வசந்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார்.பிறந்த குழந்தை தரையில் விழுந்ததால் கதறி அழுதபடியே சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
அதன் பின் டாக்டர்கள் வசந்திக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்று தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதித்தனர்.
டாக்டர்களின் அலட்சியம் தான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்று வசந்தியின் தாய் சாரதா மகப்பேறு மருத்துவமனையில்உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதில் கொடுமையான செய்தி என்னவென்றால், வசந்தி பிரசவ வலியால் துடித்துக் கொண்டுயிருந்த போது அவசர சிகிச்சைபிரிவில் உள்ள டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றனர்.
வசந்திக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டரும் தற்போது தான் திருமணம் முடிந்து 5 மாத கர்ப்பமாக உள்ளார் என்பதுதெரிந்துள்ளது.
குழந்தை வராண்டாவில் பிறந்து இறந்த பிறகு வசந்தியின் தாயார் சாரதா அங்கிருந்த டாக்டர் மற்றும் ஊழியர்களை ஒரு பிடிபிடித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications